அதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம்? ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு?
சென்னை: அதிமுகவில் இருக்கிற பிரச்சனைகள் போதாது என்பதைப் போல டிடிவி தினகரன் வீட்டு திருமணம் புதிய புயலை கிளப்ப காத்திருக்கிறது. ஓபிஎஸ் அணிக்கு மட்டும் தினகரன் வீட்டு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட இருக்கிறது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
அதிமுக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பகிரங்கமாக மோதிக் கொண்டனர். ஆனாலும் ஈபிஎஸ் தரப்புதான் வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்
எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை இன்னமும் ஏற்க முடியாத மனநிலையில் இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இதனால் அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை கொடுப்பது என எடப்பாடி முடிவு செய்திருக்கிறார்.

கொறடாவுக்கு போட்டி
அதேபோல் கட்சி கொறடா பதவி யாருக்கு என்பதிலும் இழுபறி தொடருகிறது. இப்படி அதிமுகவில் ஒவ்வொரு விவகாரத்துக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் உக்கிரம் காட்டி வருகின்றன. அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறது என்கிற சடுகுடு விளையாட்டால் கட்சியின் எதிர்காலம் குறித்து சீனியர்கள் மிகவும் கவலைப்படுகின்றனர்.

தனி அறிக்கைகள்
ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில் புதிய தர்மயுத்தம் தொடங்குவதற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டனர் போலவே தெரிகிறது. இதனாலேயே அவ்வப்போது அதிமுகவின் லெட்டர் ஹெட் பயன்படுத்தாமல் தனியாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.

சசிகலாவுடன் இணைகிறாரா?
இப்படி தனி ஆவர்த்தனம் வாசித்து வரும் ஓபிஎஸ், எந்த நேரத்திலும் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவில் சுனாமியை கூட கொண்டுவரலாம் எனவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் மன்னார்குடி வட்டாரங்களின் தகவல்களும் இருக்கின்றன. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

தினகரன் வீட்டு திருமணம்- ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு?
சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் மகளின் திருமணம் நடைபெறப் போகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தினகரன் பிஸியாக இருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்புவது என தினகரன் தரப்பில் ஆலோசனை நடத்தப்படுகிறதாம்.

திருமணத்தில் கலகக் குரல் வெடிக்கும்?
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை சேர்க்க வேண்டும்; அமமுகவை இணைத்துக் கொள்ள வேண்டும் என குரல் கொடுத்தது ஓபிஎஸ் அணி. ஆனால் ஈபிஎஸ் அணி இதனை முற்றாக நிராகரித்தது. இப்போது தேர்தலுக்குப் பின்னர் தமக்கான முக்கியத்துவம் முற்றாக இல்லாமல் போய்க் கொண்டிருப்பதால் இயல்பாகவே ஓபிஎஸ் அணி சசிகலா கோஷ்டியுடன் கை கோர்க்கத்தான் செய்யும். டிடிவி தினகரன் வீட்டு திருமணம் இதற்கு பிள்ளையார் சுழி போடக் கூடும் என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்!












Click it and Unblock the Notifications