பாஜகவுக்கு டிடிவி தினகரன் சொன்ன நிபந்தனை.. கையை பிசையும் அண்ணாமலை.. விஜய் வைத்த செக்!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு கடந்த சில மாதங்களாக பாஜக தரப்பில் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அமமுக தரப்பில் சில நிபந்தனைகள் போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் கிட்டதட்ட விஜய் பக்கம் செல்வது உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம்பெற்றது. அப்போது முதலே பாஜகவுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்காக நான் பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய டிடிவி தினகரன், அடுத்த சில மாதங்களிலேயே பேக் அடித்தார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறிய டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து பாஜக தரப்பில் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை. அதேபோல் டிடிவி தினகரன் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், விஜய்யுடனும் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு பிறகோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே டிடிவி தினகரன் கூட்டணி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அண்ணாமலை மூலமாக டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுநாள் வரை பிடி கொடுக்காமல் இருக்கிறார். இதனால் பாஜகவும் என்ன செய்வதென தெரியாமல் உள்ளது.
இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுகவே போட்டியிடும் என்று அறிவித்தார். தொடர்ந்து, திருச்சியில் நடந்த கூட்டத்தில் முசிறி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரனை வேட்பாளராக அறிவித்து அதிரச் செய்தார். இது என்டிஏ கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவோரிடம் அமமுக கேட்கும் தொகுதிகள் கொடுத்தால் மட்டுமே என்டிஏ கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் நிபந்தனை விதித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் டிடிவி தினகரனை எப்படி சமாளிப்பது என்று பாஜக தலைமையும் ஆலோசித்து வருகிறது. இதனால் டிடிவி தினகரன் விஜய் பக்கம் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தவெகவால் மட்டுமே டிடிவி தினகரன் எதிர்பார்க்கும் தொகுதிகளை கொடுக்க முடியும். ஏற்கனவே செங்கோட்டையன் மூலமாக விஜய் தரப்பு அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் கூட்டணியை பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதனால் பொங்கலுக்கு பின் விஜய், டிடிவி தினகரனை ஒரே மேடையில் பார்க்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
-
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!












Click it and Unblock the Notifications