செப்டம்பர் 8ல் வந்த அழைப்பு.. என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்தது எப்படி? தெளிவாக சொன்ன டிடிவி தினகரன்
சென்னை: என்டிஏ கூட்டணியில் இணைந்ததன் பின்னணியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அண்ணாமலை பேசிய பின், மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாக கூறிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்த பின் என்டிஏ கூட்டணியில் இணைந்ததாக கூறி இருக்கிறார்.
துரோகத்திற்கான நோபல் பரிசு என்று ஒன்றை கொடுத்தால், அதனை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் டிடிவி தினகரன் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கிவிடலாம் என்றும் பேசி இருந்தார். ஆனால் திடீரென கடந்த மாதம் என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தார்.

என்டிஏ கூட்டணியில் அமமுக
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும், அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்றும் டிடிவி தினகரன் அழைத்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சகோதரர் டிடிவி தினகரன் என்று அழைத்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மோதிக் கொண்டிருந்த சூழலில், திடீரென சுமூக உறவுக்கு வந்தது குறித்த கேள்விகள் எழுந்தன.
டிடிவி தினகரன் பேட்டி
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், செப்டம்பர் 8ஆம் தேதியே என்னை டெல்லிக்கு அழைத்தார்கள். திடீரென என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் என்று என்னிடம் பேச நினைத்தார்கள். இதனை அண்ணாமலை என்னிடம் கூறி இருந்தார். செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லியில் சந்திப்பு நடப்பதாக இருந்தது.
பாஜக வைத்த வேண்டுகோள்
ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வந்துவிட்டதால் சந்திப்பு நடக்கவில்லை. பின்னர் டெல்லியில் என்னுடன் பல்வேறு தலைவர்கள் என்னிடம் பேசினார்கள். உங்களின் ஆதங்கம் புரிகிறது.. எல்லாவற்றையும் சரி செய்வோம்.. திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.. நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
பீகார் தேர்தலுக்கு பின்
இறுதியாக நாங்கள் நிச்சயம் அழைக்கிறோம் என்று சொன்னார்கள். நானும் நீங்கள் அழைக்கும் போது நிச்சயம் வருகிறேன் என்று கூறி இருந்தேன். பீகார் தேர்தல் முடிவடைந்த பின்னரே என்னுடன் பேசினார்கள். என்டிஏவில் இணைவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள் என்றேன்.
அமித்ஷா சொன்ன வார்த்தை
தொடர்ந்து அமித்ஷா என்னிடம் பேசிய போது, எடப்பாடி பழனிசாமி சம்மதத்துடன் தான் நான் உங்களிடம் பேசுகிறேன். அவர் முழு மனதுடன் உங்களை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று விரும்புகிறார். 2021ல் நடந்த தவறு நடக்கக் கூடாது.. இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார். உடனடியாக நான், எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.. நிர்வாகிகளிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றேன்.
விஜய் தாக்கம் எப்படி?
என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் சரி என்று கூறிவிட்டனர். பின்னர் அவர்கள் அழைத்த போது கூட்டணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்கு, விஜய்யின் தாக்கம் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று கருதுகிறேன். எங்களுக்கு வாக்களிக்க முடியாத அனுதாபிகளின் வாக்குகளும் விஜய்க்கு செல்லலாம்.
திமுகவுக்கு சரிவு
திமுகவின் வாக்கு வங்கியாக யார் எல்லாம் இருக்கிறார்களோ, அதில் விஜய் பாதிப்பை ஏற்படுத்துகிறார். ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்கு வந்து சேரும். விஜய் திமுகவின் வாக்குகளை தான் பெறப் போகிறார். எப்படி ஆர்கே நகரில் திமுகவுக்கு ஒரு சரிவு ஏற்பட்டதோ, அப்படியான சரிவை விஜய் உருவாக்குவார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
பாஜகவிற்கு நல்ல செய்தி.. இன்று காலை டெல்லி விரையும் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா சந்திப்பது ஏன்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications