இப்படியே போனால் எப்படி? அடுத்த ப்ளான் என்ன? ஜூன் 7ஆம் தேதி அமமுக செயற்குழுவை கூட்டும் டிடிவி தினகரன்
சென்னை: ஜூன் 7ஆம் தேதி சென்னையில் அமமுக செயற்குழு கூட்டத்தை அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பிறகு இந்த செயற்குழு நடைபெறவுள்ளதால் அது குறித்தும் எதிர்கால கட்சியின் பாதை குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல் அமமுகவிலிருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூரில் மிக எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமமுக கட்சியானது முக்கியப் பிரமுகர்களின் விலகலால் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செயற்குழு தொடர்பாக டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 07.06.2023 புதன் கிழமை அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.''
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications