ஒசூர் சட்டசபை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வா.புகழேந்தி... நெல்லை வேட்பாளர் அதிரடி மாற்றம்
Recommended Video

சென்னை: ஒசூர் சட்டசபை தொகுதியின் அமமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் அமமுக தனித்து போட்டியிடுகிறது.

இக்கட்சி சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்களை 2 கட்டங்களாக தினகரன் வெளியிட்டார். இந்த நிலையில் ஒசூர் சட்டசபை மற்றும் புதுவை எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஒசூர் தொகுதியில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்தார். அது போல் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.
மேலும் அ.ம.மு.க சார்பில் நெல்லையில் ஞான அருள்மணி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் அத்தொகுதியில் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் கர்நாடக மாநில கழக செயலாளராகவும் இருந்துவருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications