தனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு...! தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இல்லாத வி.எம்.எஸ்.முகமது முஸ்தபாவுக்கு தினகரன் செய்தித்தொடர்பாளர் பதவி அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை வலுவாக இருந்த அமமுகவின் உட்கட்டமைப்பு தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்டம் காணத்தொடங்கியது. முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக தினகரன் அணியில் இருந்து கழன்று அதிமுக, திமுக என இணைந்துகொண்டனர். இதனால் அமமுகவில் பல பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படாமலேயே காலியாக இருந்தது.

இந்நிலையில் தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும், அண்மையில் நடிகர் செந்திலுக்கு கூட அமமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கினார். இதனிடையே இன்று தனது கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் தினகரன். அதில், தனிக்கட்சி நடத்தி வரும் ஒருவரையும் தனது கட்சி செய்தித் தொடர்பாளராக நியமித்திருக்கிறார்.
தமிழ்நாடு முஸ்லீம் லீக் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருபவர் வி.எம்.எஸ்.முஸ்தபா. இதுவரை அமமுக ஆதரவாளர் என்ற முகவரியில் ஊடக விவாதங்களில் அவர் கலந்துகொண்டு வருகிறார். இப்படி அவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை கொண்டு இயங்கும் முஸ்தபாவை தனது கட்சி செய்தித்தொடர்பாளர்கள் பட்டியலில் இணைத்துவிட்டார் தினகரன். இது அமமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் திமுகவுக்கு சென்றதால் நடேசன் என்பவரை பொறுப்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications