Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளின் திருமண வரவேற்புக்கு குடும்பத்தோடு வரணும்.. அமமுக தொண்டர்களுக்கு டிடிவி அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளின் திருமண வரவேற்பில் குடும்பத்தினரோடு கலந்துகொள்ளுமாறு அ.ம.மு.க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

TTV Dinakaran has written a letter to the AMMK volunteers asking them to attend the daughters wedding reception with their families

கடந்த 16.09.2021 அன்று இருவருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா திருமணத்தில் கலந்து கொண்டார். நடிகர் பிரபு தன் குடும்பத்தினருடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.

ஜெயஹரினி, ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் வருகிற 27.10.2021 அன்று தஞ்சை மாவட்டம், பூண்டியில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் மகளின் திருமண வரவேற்பில் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொள்ளுமாறு அ.ம.மு.க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- இதய தெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்... திருவண்ணாமலையில் நடைபெற்ற எனது அன்பு மகள் திருமணத்தைத் தொடர்ந்து வரும் 27.10.2021 புதன்கிழமை காலை 11 மணியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். எதிர்பாராவண்ணம் அழைப்பிதழ் கிடைக்கத் தவறியிருந்தால் இதனையே எனது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திட அன்போடு வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+