நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியே வரும் டிடிவி தினகரன்.. பெரும் எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
சென்னை: மேகதாது அணை பிரச்சினையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் அமமுக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தினகரன் வெளியே வருவதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஆர் கே நகர் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் பல இழுபறிகளுக்கு பின்னர் அந்த தொகுதிக்கு 2017 இல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் திமுக, ஆளும் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு தினகரன் அந்த தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

சட்டசபை தேர்தல்
இதையடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி சொல்லிக் கொள்ளும்படியான எந்த வெற்றியையும் பெறவில்லை. இந்த நிலையில் தினகரன் கட்சி தொடங்கிய நாள் முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

மேகதாது அணை
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூரில் தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு தினகரன் வெளியே வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் தினகரன் தேர்வு செய்யப்பட்டார். 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

பிரச்சாரம்
அத்துடன் அவர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெளியே வந்தார். ஹவாலா மோசடி புகார், ஆர் கே நகர் இடைத்தேர்தல், அமமுக கட்சி தொடக்கம் என அவர் வெளியே வந்தார். இதையடுத்து 2019, 2021 நாடாளுமன்றத் தேர்தல் சட்டசபை தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய வெளியே வந்தனர்.

நீண்ட இடைவெளி
மற்றபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவ்வப்போது கண்டன அறிக்கை வெளியிடுவார். அதே நேரத்தில் மத்திய மாநில அரசுகளின் நல திட்டங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதையும் தினகரன் மறக்க மாட்டார். இவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களுக்கும் கட்சி கூட்டத்திற்கும் வெளியே வந்த தினகரன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மக்கள் பிரச்சினைக்காக வெளியே வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications