சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவனிச்சீங்களா.. தினகரன் பேசும்போது அந்த வார்த்தை.. "மொத்த" அதிமுகவும் வந்துரும் போலயே!

அதிமுக, அமமுக விரைவில் இணையும் என்றே தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவேளை அதிமுக - அமமுக இணையுமா என்ற டவுட் இருந்து கொண்டே வரும் நிலையில்தான், டிடிவி தினகரன் அந்த வார்த்தையை சொல்லி உள்ளார்.. இணைப்புக்கான செம சிக்னல் என்றே இது கருதப்படுகிறது!

சசிகலாவின் விடுதலை பல்வேறு தாக்கங்களை, அதிரடிகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.. நடப்பதை எல்லாம் பார்த்தால், நிர்வாகிகள் பலரும் சசிகலா தரப்புக்கு ஆதரவு தந்து வருவதுபோலவே தெரிகிறது.

எடப்பாடியாருக்காக, யாரும் வெளிப்படையாக வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்களே தவிர, சசிகலாவின் வருகையை பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வலையர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலையர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 அமமுக

அமமுக

அதிமுகவுடன் அமமுக இணையுமா? சசிகலா பொறுப்பை ஏற்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து கிடக்க, அவரது டிஸ்சார்ஜ்-க்கு பிறகு நடந்து வரும், நிறைய மாறுதல்களும் மூத்த தலைவர்களிடம் தென்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை எடப்பாடியாருடன் சேர்ந்து எதிர்த்தவர்களில் கேபி முனுசாமியும் ஒருவர்.. "டிடிவி தினகரன் தான் செய்ததெல்லாம் தவறு என்று கடிதம் எழுதிக் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பரிசீலிக்கப்படும்" என்று இவரே தெரிவித்துள்ளதுதான் இதற்கான பிள்ளையார் சுழியாக பார்க்கப்படுகிறது.

 துணை ஒருங்கிணைப்பாளர்

துணை ஒருங்கிணைப்பாளர்

அதற்கேற்றவாறு, முனுசாமியின் இந்த கருத்துக்கு இதுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ, துணை ஒருங்கிணைப்பாளரோ கருத்து கூறவில்லை.. மறுப்பு கூறவில்லை.. விளக்கம் கூறவில்லை.. முனுசாமி இப்படி ஒரு பேட்டியை கட்சி தலைமைகளின் ஒப்புதல் இல்லாமல் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்குமா, ஒருவேளை இது முனுசாமியின் தனிப்பட்ட கருத்து என்று எடுத்து கொள்வதா? என்று தெரியவில்லை..

சசிகலா

சசிகலா

இன்னொரு பக்கம் டிடிவி தினகரன், பார்த்துட்டே இருங்க, சசிகலாவை வரவேற்க ஓபிஎஸ்ஸே சென்னையின் எல்லையிலேயே வந்து நிற்பார் என்று சொன்னதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. இதுபோன்ற சூழலில்தான் தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார். அதில், "எங்களுக்கு குறுகிய மனப்பான்மை கிடையாது. இப்போது பேசியவர்கள் முன்பு எப்படி பேசினார்கள், இப்போது எப்படி பேசினார்கள் என்பதையெல்லாம் நினைச்சு பார்த்து ஒரு காமெடியாகவே எடுத்துக்கறேன்.. அமமுக தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. எங்களது ஒரே நோக்கம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான்" என்று சொல்லி உள்ளார்.

 சமாதானம்

சமாதானம்

அதாவது, டெல்லி மேலிடம் அன்று என்ன நினைத்ததோ, என்ன நினைத்து தினகரனை டெல்லிக்கு வரவழைத்து பேசியதோ, என்ன சொல்லி எடப்பாடியாரை சமாதானப்படுத்த முயன்றதோ, சாட்சாத் அதே குரலின் எதிரொலியாகவே தினகரனின் பேச்சும் பார்க்கப்படுகிறது.. யோசிக்க வைத்து வருகிறது..!

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

"யார் பேசியதையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று தினகரன் சொல்வது அநேகமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைதான் என்று ஓபனாகவே தெரிகிறது... திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்களது ஒரே நோக்கம் என்று உறுதியாக சொல்லி இருப்பதன் மூலம் அதிமுகவை ஒன்றிணைப்பதே லட்சியமாக தெரிகிறது.. அதாவது, அமமுக, அதிமுக பக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டே இருக்கிறது.. அநேகமாக மோடி வருவதற்குள் எல்லாம் சுமூகமாகவே முடிந்து விடும் போல..!

English summary
TTV Dinakaran says about ADMK and Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X