வணக்கம் கூட வைக்காமல் எகிறிய தினகரன்! ஆண்டிப்பட்டி அனுராதா கூட்டணியை உடைக்க சசிகலா இறக்கும் "ஒருவர்"
சென்னை: தேனி மாவட்ட அரசியல் மீண்டும் தீவிர திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் ஒரே அணியாக இருந்த தலைவர்கள் இன்று ஒருவருக்கொருவர் எதிராக வியூகம் வகுக்கும் சூழல் உருவாகியுள்ளது... இந்த மாற்றம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தென் மாவட்ட அரசியலை புதிய பாதைக்கு இட்டு செல்லும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அங்கே என்ன நடக்கிறது?
தமிழக அரசியல் வரலாற்றில் தேனி மாவட்டம் தனித்துவமான இடம் பெற்றுள்ளது.. குறிப்பாக அதிமுகவின் வலுவான ஆதரவு தளமாக இது நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.

சசிகலா தினகரன்
இந்த மண்ணில்தான் சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் கடந்த 1999ல் எம்பி அரசியலில் அறிமுகமானார். பிறகு பல்வேறு அரசியல் சுழற்சிகளை தொடர்ந்து இருவருக்கும் இடையே உறவு முறிவு ஏற்பட்டது.. காலப்போக்கில் உருவான கருத்து வேறுபாடுகள் இன்று நேரடி அரசியல் போட்டியாக மாறியுள்ளன.
2024 எம்பி தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு 2வது இடம் பெற்ற தினகரன், அடுத்த கட்டமாக வரப்போகும் தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியை குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காகவே தேனியில் பிரமாண்டமான பங்களா பிடித்து தங்கி நிலைமைகளை ஆராய்ந்து வருவது அவரது தீவிரத் திட்டமிடலையும் காட்டுவதாக கருதப்படுகிறது.
தேனி, ஆண்டிப்பட்டி
நேரடியாக தினகரன் போட்டியிடாவிட்டாலும் அவரது மனைவி அனுராதா அல்லது குடும்ப உறுப்பினர் போட்டியிடலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன.. இதையறிந்த சசிகலா, தேனி மாவட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் அழைத்து பேசி வருவது அமமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே நேரத்தில்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைப்பும் தென் மாவட்டங்களில் தனது நிலையை வலுப்படுத்த முயன்று வருகிறது.
ஒருபக்கம் எடப்பாடி, மறுபக்கம் தினகரன், இவர்கள் இருவருக்கும் நடுவில் சசிகலாவின் நகர்வுகள் முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன. அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட நிலைமையிலிருந்து மீண்டும் தாக்கம் செலுத்த வேண்டுமெனும் முயற்சியாக அவரது அணுகுமுறை பார்க்கப்படுகிறது. தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் ஒருவித புரிதலுடன் செயல்படுகின்றன என்ற மதிப்பீடு சசிகலா தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது...
வாரிசுகள் - சித்தி பிளான்
எனவேதான், அதற்கு எதிர்வினையாக, தேனி மாவட்டத்திலேயே குடும்ப வாரிசுகளை முன்னிறுத்தி தனி அரசியல் சக்தியை உருவாக்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.
கடந்த 1999ல் தினகரனை இறக்கிவிட்டது போல, வரும் தேர்தலில் தினகரனுக்கு எதிராக தனது சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் அல்லது இளவரசியின் மகன் விவேக் ஆகியோரை களமிறக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேச்சு ஓடுகிறது..
திவாகரனின் கட்சியும், சசிகலாவின் புதுக்கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தினகரனை டெபாசிட் இழக்கச் செய்ய அவர்கள் தீவிரம் காட்டி வருவது எடப்பாடி தரப்பையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென் மாவட்ட வியூகம்
சமீபத்தில் அண்ணா நினைவிடத்தில் சசிகலாவை பார்த்ததுமே, பரஸ்பர வணக்கம்கூட வைக்காமல், தினகரன் அவசரமாக கிளம்பிச் சென்றது இருவருக்கும் இடையிலான மோதலை உறுதிப்படுத்திய நிலையில், தென் மாவட்ட பிரச்சனை வெடித்து கிளம்பி உள்ளது..
இது வெறும் தொகுதி போட்டி மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் ஆதிக்கத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்ற பெரிய அரசியல் சவாலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேனி போன்ற மாவட்டங்களில் தனிப்பட்ட உறவுகள் மற்றும் குடும்ப அடையாளம் முக்கியமான அரசியல் காரணிகளாக இருப்பது இங்கு கவனம் பெற்றுள்ளது.
அமமுக வாக்குகள்
இந்த பலத்த போட்டிகளில் யார் வெற்றி பெற போகிறார் என்பது தெரியவில்லை... ஆனால் சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு, அதிமுக மற்றும் அமமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செக் ஆக அமையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதேபோல தினகரனின் வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பது எடப்பாடி அணிக்கும் சவாலாக அமையலாம்..
மொத்தத்தில், தேனி மாவட்டத்தில் உருவாகும் இந்த முக்கோண அரசியல் போட்டி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தின் சக்தி சமநிலையை மாற்றக்கூடியதாய் மாறியுள்ளது. இறுதியில் வெற்றி பெறுவது யார் என்பதற்கும் மேலாக, இந்த போட்டி அதிமுக வேர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கலாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் ஆழமான மதிப்பீடாகும்.... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications