"என் கூட அப்பப்ப வா! இல்ல மாமனாருக்கு 'அந்த' வீடியோ அனுப்பிடுவேன்!" பெண்ணை மிரட்டிய டியூஷன் மாஸ்டர்!
சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் டியூஷன் படித்த கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதாக டியூஷன் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தனது ஆசைக்கு இணங்கும் வரை கணவருடன் வாழ விடமாட்டேன் என்றும் டியூஷன் மாஸ்டர் மணிகண்டன் மிரட்டியுள்ளாராம்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 39 வயதான மணிகண்டன். இவர் விருதுநகர் மாவட்டம் மேட்டுக்குடி கிராமத்தில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மேட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி டியூஷன் சென்டரில் சேர்ந்து படித்து வந்தார்.

மாணவி சரிவர படிக்காததால் அவர் மீது தனி கவனம் செலுத்திய மணிகண்டன், அவருக்கு நன்றாக புரியும்படி கற்றுக் கொடுத்ததால் அந்த மாணவி நல்ல மதிப்பெண்ணை பெற்றார். இதையடுத்து அந்த பெண் கல்லூரியில் சேர்ந்த போதிலும் கூட ஏதாவது சந்தேகம் இருந்தால் மணிகண்டனிடம் கேட்டு தெளிவடைந்தார்.
அப்போது மணிகண்டன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினாராம். ஆனால் அவரது நடவடிக்கைகள் எல்லை மீறுவதை உணர்ந்த மாணவி, அவரிடம் இருந்து விலக முயற்சி தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம். பின்னர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சென்னை மண்ணிவாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டார்.
அந்த பெண்ணை பல வழிகளில் மணிகண்டன் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை கிண்டியில் குரு டியூஷன் சென்டர் என்ற பெயரில் புதிய டியூஷன் சென்டரை தொடங்கினார் மணிகண்டன். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் காதலித்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் பார்த்து விட்டார். பின்னர் அந்த மாணவிக்கு இன்ஸ்டாவில் மணிகண்டன் மெசேஜ் அனுப்பியிருந்தாராம்.
இதை பார்த்த அந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்ததுடன் "இனி எனக்கு மெசேஜ் செய்ய வேண்டாம். என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்" என கூறியிருந்த அந்த பெண், உடனே மணிகண்டனை பிளாக் செய்துவிட்டாராம். ஆனாலும் மணிகண்டன், அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என எண்ணிய நிலையில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கினார்.
அதாவது அந்த பெண்ணின் முன்னாள் கல்லூரி நண்பர் போல், அந்த பெண்ணிடம் பேசினாராம். அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் வீட்டு முகவரியையும் வாங்கிய மணிகண்டன், திருவொற்றியூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என அந்த பெண்ணை தொந்தரவு செய்தாராம். ஆனால் அந்த பெண் அச்சமடைந்ததை அடுத்து அந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது செல்போன் எண்ணையும் மாற்றினாராம். அந்த பெண்ணை தேட தொடங்கிய நிலையில் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் அந்த பெண் புதிய வீடு கட்டி குடியேறிவிட்டதை அறிந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டு வாசல் வரை வந்த மணிகண்டன், அந்த பெண்ணுக்கு போன் செய்து, "நீ வீட்டை மாற்றிவிட்டால் நான் கண்டுபிடிக்க மாட்டேனா, வந்து பாரு உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்.
நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எல்லாம் உனது கணவருக்கு அனுப்பியுள்ளேன். ஆனாலும் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அந்த அளவிற்கு உன்னை நம்பி பாசம் காட்டுகிறான். ஆனால் உன் மாமனாருக்கு நாம் ஒன்றாக இருந்த வீடியோவை அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?. இதெல்லாம் நடக்கக் கூடாது என்றால் நான் கூப்பிடும் போதெல்லாம் வந்து என் ஆசைக்கு நீ இணங்க வேண்டும்" என்றாராம்.
இதையடுத்து அந்த பெண் உடனடியாக வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இரு சக்கர வாகனத்தில் வீட்டின் முன் மணிகண்டன் நின்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் மேலும் அச்சமடைந்த அந்த பெண் தனது கணவரிடம் நடந்தவை அனைத்தையும் கூறினாராம்.
இதையடுத்து மண்ணிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாலையில் அவரது வீட்டிற்கு சென்ற போலீஸார், தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை எழுப்பி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீஸார், அவரிடம் டியூஷன் படிக்கும் வேறு மாணவிகளிடம் இது போல் பிளாக்மெயில் செய்திருக்கிறாரா என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications