துருக்கி டிரோன்! சீன ஏவுகணை! அமெரிக்கா ஆதரவு! புள்ளிகளை இணைச்சு பாருங்க! பாகிஸ்தான் திமிரின் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் இந்தியா மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ள முயன்று வருகிறது. அதை உடனுக்குடன் இந்தியா தடுத்து வருகிறது. பொதுவாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் அதற்கு பாகிஸ்தான் கண்டனம் தரும், சர்வதேச அமைப்புகளில் கூட முறையீடு செய்யும்.

ஆனால் இந்தியாவை திருப்பி தாக்கியது இல்லை. இதற்கு முன் பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக கமர் ஜாவேத் பஜ்வா இருந்தார். அவருக்கு தெரியும்.. இந்தியா - பாகிஸ்தான் போர் வந்தால்.. இந்தியாதான் வெல்லும் . பாகிஸ்தான் 10 நாட்கள் கூட தாங்காது. பாகிஸ்தானின் ராணுவத்திடம் பலம் இல்லை. இருக்கிற pokவையும் இழக்க நேரிடும் என்பது அவருக்கு தெரியும். அதன் காரணமாகவே அவர் போருக்கு செல்லவில்லை.

pakistan Jammu Kashmir

ஆனால் இப்போது மட்டும் எப்படி பாகிஸ்தான் உள்ளே வந்து அடிக்க பார்க்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? இப்போது உள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முந்தைய தளபதிகள் போல இல்லை. ஈகோ பிடித்த நபர். இந்தியாவுடன் மோதினாலும் பாகிஸ்தான் தோற்கும் என்று தெரிந்தும் கூட அசிம் முனீர் இந்தியாவுடன் போருக்கு செல்ல முனைப்புடன் இருக்கிறார். அவரின் இந்த தைரியத்திற்கு பின் துருக்கி டிரோன்! சீன ஏவுகணை! அமெரிக்கா ஆதரவு என்று 3 முக்கிய காரணங்கள் உள்ளன.

அமெரிக்க ஆதரவு:

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் செய்யும் நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான முக்கிய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது இந்தியா.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு.
IMF விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது இந்தியா. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக IMF-க்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறையான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பாக். தவறியதை காரணம் காட்டி, பாகிஸ்தானில் IMF திட்டங்களின் செயல்திறனை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. IMF-ன் உறுப்பினரான இந்தியா, இவ்விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கடன் வழங்குதலுக்கான வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.

துருக்கி டிரோன்:

வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இந்தியப் பாதுகாப்புப் படைகளின் நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் 6 வகையான டிரோன்கள் மட்டுமே உள்ளன. அதன் லிஸ்ட் இங்கே.

1. Bayraktar TB2

விற்பனை செய்த நாடு: துருக்கி

வகை: நடுத்தர உயர நீண்ட தூரம் தாங்கும் (MALE) ட்ரோன்

திறன்கள்: துல்லியமான வெடிமருந்துகளுடன் ஆயுதம் ஏந்தி செல்லக்கூடியவை. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன

2. விங் லூங் II

விற்பனை செய்த நாடு: சீனா

வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய ஆயுதம் ஏந்திய ட்ரோன்

திறன்கள்: நீண்ட தூர தாக்குதல், கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல்

3. CH-4 (ரெயின்போ-4)

விற்பனை செய்த நாடு: சீனா

வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய போர் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்

திறன்கள்: துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும்

4. ஷாபர்-II

விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (பாகிஸ்தானின் உலகளாவிய தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் - GIDS ஆல் உருவாக்கப்பட்டது)

வகை: போர் UAV. நீண்ட தூரம் செல்லாது.

திறன்கள்: வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளுடன் உளவு பார்த்தல் மற்றும் போர் திறன்கள்

5. பர்ராக்

விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (சீன வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது)

வகை: ஆயுதம் ஏந்திய UAV

திறன்கள்: கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்கள்; பாகிஸ்தானின் முதல் ஆயுதமேந்திய UAV

6. அன்கா (சாத்தியமான கையகப்படுத்தல் அல்லது ஆர்வம்)

தோற்றம்: துருக்கி

வகை: நீண்ட தூரம் செல்ல கூடியது.

மேற்கண்ட லிஸ்டில் 6ல் 2 பாகிஸ்தான் உருவாக்கியது. இந்த 2ம் நீண்ட தூரம் செல்ல கூடியது அல்ல. அதேபோல் வலுவான திறன் கொண்டது அல்லது. சிறிய வகை. அப்படி என்றால் பாகிஸ்தான் மீதம் உள்ள 4 டிரோன்களை மட்டுமே பயன்படுத்தி இருக்க முடியும்.

இந்த 4ம் சீனா அல்லது துருக்கி மூலம் உருவாக்கப்பட்டது. சீனா, துருக்கியின் இந்த டிரோன்களைத்தான் இந்தியா அடித்து காலி செய்து நொறுக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+