மூட்டை மூட்டையாக.. தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா? ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் பல நாடுகள் தற்போது தங்கத்தை விற்க தொடங்கி உள்ளன. தங்க நாட்டின் பணமதிப்பு சரிவதால் பல நாடுகளும் தங்கத்தை விற்று நிலைமையை சரி செய்ய பார்க்கின்றான். துருக்கியும் தற்போது தங்கத்தை கொத்து கொத்தாக விற்க தொடங்கி உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், போர்க்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்துவிட்டு அதை விற்க தொடங்கி உள்ளன.

தங்கம்... எப்போதுமே பாமரர்களுக்கும் சரி, பெரும் நாடுகளுக்கும் சரி, ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் அட்சைய பாத்திரம். ஆனால், இப்போது அந்தப் பாத்திரத்தையே காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உலக நாடுகள் தள்ளப்பட்டிருப்பதுதான் சர்வதேசப் பொருளாதாரத்தின் ஹாட் டாபிக்!

turkey sold gold

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழல், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரினால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்று பணமாக்க (Monetize)த் தொடங்கியுள்ளன.

துருக்கியின் அதிரடி 'டாப்-அப்'!

இந்தத் தங்கம் விற்பனைப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருப்பது துருக்கி. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் துருக்கியின் மத்திய வங்கி சுமார் 59 டன் தங்கத்தைக் குறைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சில பகுதிகள் நேரடியாக விற்கப்பட்டாலும், பெரும்பாலானவை 'ஸ்வாப்' (Swap) ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டுச் செலாவணிக்காகப் பரிமாறப்பட்டுள்ளன.

துருக்கிக்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2023-ம் ஆண்டிலும் கடும் பணவீக்கத்தைச் சமாளிக்க 159 டன் தங்கத்தை விற்று, பிறகு நிலைமை சீரானதும் மீண்டும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாத நிலவரப்படி 603 டன் தங்கம் வைத்திருந்த துருக்கி, இப்போது மீண்டும் 'எமர்ஜென்சி' மோடிற்கு மாறியுள்ளது.

வரிசையில் நிற்கும் போலந்து!

துருக்கி ஒரு பக்கம் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கத்தை வேட்டையாடிச் சேர்த்த போலந்து (Poland), இப்போது தன் ராணுவத்திற்காகத் தங்கத்தை விற்கத் தயாராகிவிட்டது. சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்று, நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டை இரண்டு மடங்காக உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் ஆடம் கிளாபின்ஸ்கி திட்டமிட்டுள்ளார்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

"மத்திய வங்கிகள் ஒன்றும் லாபம் பார்க்கும் 'ஹெட்ஜ் ஃபண்டுகள்' கிடையாது. ஆனால், சமூகத்தின் தற்போதைய தேவை மற்றும் போர் சூழல் காரணமாக, தங்கத்தை விட பணப்புழக்கமே (Liquidity) இப்போது அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது" என்கிறார் சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், போர்க்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்துவிட்டு, இருப்பைக் கரைக்கத் தொடங்கியிருப்பது சர்வதேசத் தங்க விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும் தங்கம், போர்க்களத்தில் வீரர்களைக் காக்கப் பணமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது பொருளாதாரத்திற்குப் பொற்காலமா அல்லது நெருக்கடியின் அறிகுறியா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+