கனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா
சென்னை: தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கீதா ஜீவன், தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்பியுடன் பல்வேறு மக்கள் நல பணிகளில் இணைந்து செயல்பட்டவர் கீதா ஜீவன். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தின்போது சாத்தான்குளத்திலேயே முகாமிட்டு கனிமொழியுடன், பணியாற்றியவர் கீதா ஜீவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications