Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நாசம் செய்துட்டான்".. கதறிய நடிகை.. ஆனால் ஆடியோவை கேட்டா.. ஆஹா.. மேட்டரே வேறப்பா!

டிவி நடிகை அளித்த பலாத்கார புகாரில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை ராஜேஷ் என்பவர் உடல்ரீதியாக உறவு கொண்டு ஏமாற்றி விட்டதாக டிவி நடிகை பரபரப்பு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அது தொடர்பான ஆடியோ ஆதாரமும் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

2 நாட்களாக ஒரு பலாத்கார விவகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.. சென்னையை சேர்ந்தவர் அந்த நடிகை.. 24 வயதாகிறது.. நிறைய தமிழ் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.. அதேபோல சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இவரது முன்னாள் காதலன் பெயர் ராஜேஷ்.. அவருக்கு 29 வயதாகிறது.. இந்நிலைலயில், ராஜேஷ் மீது நடிகை திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் கடந்த வருடம் ஒரு புகாரை கொண்டு வந்தார்.

 நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அதில், ராஜேஷூக்கும் தனக்கும் 2019 டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், இதற்கு பிறகு பலமுறை தன்னை தனிமையில் சந்தித்து ராஜேஷ் உடலுறவு கொண்டதாகவும், ராஜேஷ் தன்னிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பறித்து கொண்டு, கல்யாணமும் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

 சென்னை ஹைகோர்ட்

சென்னை ஹைகோர்ட்

ஆனால், இந்த புகாரில் போலீசார் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை போல தெரிகிறது.. அதனால், சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் நடிகை. இந்த மனுவை விசாரிக்கும்படி கோர்ட் உத்தரவிடவும், அதன்படியே போலீசாரும் விசாரணையை ராஜேஷிடம் ஆரம்பித்தனர்.. இந்த சம்பவம்தான் கடந்த 2 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என்று ராஜேஷ் சொல்கிறாராம்.

புகார்

புகார்

அத்துடன் நடிகையின் நடத்தை சரியில்லை, அவர் பல பேருடன் தொடர்பு வைத்துள்ளார், இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, அதனால்தான் அவரை விட்டு பிரிந்தேன் என்று ராஜேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்துதான், அந்த நடிகை பணம் பறித்துக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, சில ஆடியோ ஆதாரங்களையும் போலீசில் தந்துள்ளார். அதில் ராஜேஷூடன் வாட்ஸ்அப்பில் நடிகை பேசுவது பதிவாகி இருக்கிறது..

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அந்த ஆடியோவில், "தொழில் சரியா நடக்கல.. நிறைய ரெய்டு வருது.. ஹோட்டல், வீடுன்னு எங்கே இருந்தாலும் போலீஸ் புடிச்சிடுது.. என்ன பண்றதுன்னே தெரியல.." என்று பேசுவது போன்ற குரல் பதிவாகி உள்ளது. பின்னர் இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடந்த விசாரணையில் நடிகை தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. ஒட்டுமொத்த தவறையும் தான் செய்துவிட்டு, காதலனை ஏமாற்றி பணத்தையும் பறித்து கொண்டு, அவர் மீது கோர்ட் வரை புகாரும் தந்த நடிகை இப்போது அவர் பேசிய ஆடியோவாலேயே சிக்கி கொண்டுள்ளது பெரும் திருப்பத்தை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+