தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுக பெண் நிர்வாகி மீது ஆபாச விமர்சனம்.. திமுக நிர்வாகிக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிமுக பெண் நிர்வாகி சசிரேகா மீது திமுக நிர்வாகி விக்கி ஆபாசமாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, பெண்கள் யாரும் பாலியல் குற்றங்களைப் பற்றி பேசக் கூடாது. மீறி பேசினால் ஆபாசக் கணைகளை வீசுவோம் என்பதே திமுகவின் DNA என்று விமர்சித்துள்ளது.

தனியார் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் மயிலாடுதுறை விக்கி, அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு, அதில் சம்பந்தப்பட்டுள்ள ஞானசேகரன் பின்னணி குறித்து சசிரேகா குற்றச்சாட்டுகளை வைத்தார்.

admk dmk

அதற்கு திமுக விக்கி, சசிரேகா அவன் வீட்டு படுக்கையறையில் சாப்பிட்டதாக எல்லாம் சொல்கிறார். ஞானசேகரன் வீட்டு படுக்கையறை சசிரோகவுக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இதற்கு சசிரேகா விவாதத்தில் இருந்த அரசியல் விமர்சிகர் பொன். வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு பெண்ணை பார்த்து படுக்கையறை எப்படி தெரியும் என்று கேட்கிறார் அதை எப்படி அனுமதிக்கிறீர்கள், என்று நெறியாளரிடம் கேள்வி எழுப்பினார். சசிரோகவும் விக்கி சொன்ன கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று நெறியாளரிடம் முறையிட்டார். நெறியாளர் விக்கியிடம், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.

அதற்கு விக்கி, படுக்கையறை பற்றி பேசியது நீங்கள் தான். அதில் இருந்துதான் நான் பதில் கொடுக்கிறேன் என்று தொடர்ந்து அதிமுக குறித்து புகார்களை வைத்தார். இந்த சம்பவத்துக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக எனும் ஆபாசவாதிகளின் உறைவிடம். கயவனின் கடைசி ஆயுதம் ஆபாசம். ஆனால், திமுககாரனின் முதல் ஆயுதமே அது தான். கழக செய்தித் தொடர்பாளர் சசிரேகாவை திமுக செய்தி தொடர்பாளர் விக்கி பேசிய அருவருக்கத்தக்க பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஞானசேகரன் தொடங்கி தெய்வச்செயல் வரை தங்கள் கட்சியின் லட்சணம் ஊரெல்லாம் நாறிக் கொண்டிருக்க, திமுகவின் கொத்தடிமைகள் இன்னும் பெண்களை நடத்தும் விதம் இது தான். 'பெண்கள் யாரும் பாலியல் குற்றங்களைப் பற்றி பேசக் கூடாது. விமர்சிக்கக் கூடாது. மீறி விமர்சித்தால் ஆபாசக் கணைகளை வீசுவோம்.' என்பதே திமுகவின் DNA!

அதற்கு உதாரணம் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு. 'வழக்கு கொடுக்காதே, Medical Test எடுக்காதே' என மாணவியிடம் சொல்லியது முதல், FIR லீக் வரை சகல சித்துவேலைகளையும் செய்தது திமுக. அதேபோல அண்ணா நகர் பாலியல் வழக்கில், 10 வயது சிறுமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணையை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்று வாதிட்டது திமுக அரசு.

இப்படிப்பட்ட இவர்கள் தான் அண்ணா பல்கலை. வழக்கில் தீர்ப்பு வாங்கி தந்தார்கள் என்று சொன்னதை மக்கள் யாருமே நம்பவில்லை. ஞானசேகரன் இழைத்த குற்றத்திற்கு இணையான பெரும் குற்றம் தான் இந்த விக்கியின் பேச்சு. திமுக உண்மையிலே பெண்களுக்கான கட்சி என்றால், ஸ்டாலின் இந்த ஆபாச பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

விக்கியின் இந்த பேச்சுக்கு நெறியாளர் அமைதியாக இருந்த போதும், நியாயமாக குரல் கொடுத்த அரசியல் விமர்சகர் பொன். வில்சன் அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்." என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+