புஸ்ஸி - நிர்மல்குமார்.. இரண்டு பேர்தான் பிளான் போட்டது! ஒரே வாதத்தில் லாக் செய்த அரசு! திருப்பம்
சென்னை: கரூர் கூட்டத்திற்கு அனுமதி கேட்டது மதியழகன் ஆக இருந்தாலும்.. திட்டங்களை வகுத்தது எல்லாம் புஸ்ஸி ஆனந்த் - நிர்மல் குமார்தான். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சார்பாக நீண்ட வாதங்கள் வைக்கப்பட்டன.
5 வழக்கறிஞர்கள் களமிறங்கி வாதம் வைத்தனர். இதை பொறுமையாக கேட்ட அரசு தரப்பு அதன்பின் கடுமையான பதில் வாதங்களை வைத்தது. அதில், நாங்கள் 120 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 105 பேரிடம் இதில் வாக்குமூலம் வாங்கி உள்ளோம் . அந்த விசாரணை அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்துள்ளோம்.
தமிழக அரசின் கடுமையான வாதம்
கரூர் கூட்டத்திற்கு அனுமதி கேட்டது மதியழகன் ஆக இருந்தாலும்.. திட்டங்களை வகுத்தது எல்லாம் புஸ்ஸி ஆனந்த் - நிர்மல் குமார்தான். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த வாக்குமூலம் அடிப்படையில்தான் FIR பதிவு செய்துள்ளோம். கூட்டத்திற்கான எல்லா திட்டங்களையும் வகுத்தது.. எல்லா பிளான்களையும் வகுத்து கொடுத்தது.. இவர்கள் இருவரும்தான். அதனால் அவர்கள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும்.
அவர்களை கைது செய்து விசாரித்தால்தான் சரியாக இருக்கும். கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம். அவர்கள் ரோடு ஷோ செய்ய அனுமதி வாங்கவில்லை. ஆனால் அதை மீறி விஜய் ரோடு ஷோ நடத்தினார். நாங்கள் இதை தடுத்திருக்கலாம். ஆனால் நாங்கள் தடுத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு முன் விஜயை தடுத்தால் அதனால் பிரச்சனை ஏற்படும். அங்கே சட்ட ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான் ரோடு ஷோவை தடுக்கவில்லை, என்று தமிழக அரசு வாதம் வைத்தது.

புஸ்ஸி ஆனந்த் வைத்த வாதம்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறது. . இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், ஒரு நிகழ்ச்சியை நடத்திய நபராக உங்களுக்கு இந்த விவகாரத்திற்கு பொறுப்பு இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்த நீதிபதிகள், உங்கள் மீது தவறே இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் தானே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தீர்கள். உங்கள் மீது தவறு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்.. நான் மக்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
புஸ்ஸி ஆனந்த்
இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு.. இதில் என் மீது ஆக்சன் எடுக்க வேண்டியது ஏன்? நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன். அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர். அவர் மீது நான் குற்றஞ்சாட்டவில்லை. அவரை கைது செய்துவிட்டனர். அப்படி இருக்க என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
எங்கள் சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் இல்லை. ஒரு விபத்தை குற்றமற்ற கொலை என்று கூற முடியாது, என்று வாதம் வைத்துள்ளனர்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!











Click it and Unblock the Notifications