சல்லி சல்லியா தவெக நொறுக்கிடுச்சே.. 2 தொகுதிகளில் சரிந்த அதிமுக, திமுக வாக்குகள்.. ஒப்பீட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இப்போது கவனம் பெற்றுள்ளன.. கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்த இந்த 2 தொகுதிகளிலும் இப்போது என்ன நடந்திருக்கிறது? தவெக பெற்ற வாக்குகள் எவ்வளவு? திமுக, அதிமுகவின் வாக்கு வங்கியில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? என்பதை இங்கே சுருக்கமான ஒப்பீட்டுடன் பார்ப்போம்..!!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யா 57370 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

TVK

அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 5,273 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளர் சுகன்யாவை விட 9,471 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில், திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதியைவிட 12,090 வாக்குகள் அதிகம் பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2026 பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. திமுக 64,373 வாக்குகளையும், தவெக 46,438 வாக்குகளையும் பெற்றிருந்தன..

ஆனால், இப்போதைய இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதாவது கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது தவெகவுக்கு 20,403 வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், அதிமுகவுக்கு 35,820 வாக்குகளும், திமுகவுக்கு 7,003 வாக்குகளும் குறைந்துள்ளன..

பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றிருப்பதுடன், 3 பிரதான கட்சிகளும் பெற்ற வாக்குகளிலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் என்ன நடந்தது?

மதுராந்தகம் தனித் தொகுதியிலும் இடைத்தேர்தல் முடிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. கடைசி நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனது மனுவைத் திரும்பப் பெற்றதால், இறுதியாக 27 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்..

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 67,819 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 48,516 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 43,233 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட 19,303 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், வெற்றி வித்தியாசத்தைவிட குறைவான வாக்குகளே எண்ண வேண்டியிருந்ததால் அவரது வெற்றி உறுதியானது..

சறுக்கிய வாக்குகள்?

கடந்த 2026 பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக மரகதம் குமரவேலும், திமுக அமுலு பொன்மலரும், தவெக சார்பில் எழில் கேத்தரினும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் போட்டியிட்டார்கள்..

அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் 62090 வாக்குகளையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளை பெற்ற நிலையில், நோட்டாவுக்கு 797 வாக்குகள் பதிவாகியிருந்தது நினைவிருக்கலாம்...

இப்போது அதே மரகதம் குமரவேல், தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர், இந்த முறை தவெக வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றி பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய அரசியல் மாற்றமாக இருக்கிறது..

கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது, மதுராந்தகத்தில் தவெகவுக்கு 5,729 வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், திமுகவுக்கு 11,322 வாக்குகளும், அதிமுகவுக்கு 26,051 வாக்குகளும் குறைந்துள்ளன. இதன் மூலம், இந்தத் தொகுதியில் 3 பிரதான கட்சிகளும் பெற்ற வாக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

டோட்டல் வாக்குப்பதிவு குறைந்ததா

கடந்த முறை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 1,04,926 ஆண்கள், 1,08,797 பெண்கள், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். ஆனால் இப்போதைய தேர்தலில் 285 பூத்களில் மொத்தம் 1,84,423 வாக்குகள் பதிவாகியிருந்தன.. இது 86.26 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் 91,131 ஆண்கள் வாக்களித்துள்ளனர். ஆண்களுக்கான வாக்குப்பதிவு சதவீதம் 86.85 ஆகும். பெண்களில் 93,258 பேர் வாக்களித்துள்ளனர்... இது 85.72 சதவீதம். 3ம் பாலினத்தை சேர்ந்த 34 பேர் வாக்களித்துள்ளனர்; இவர்களுக்கான வாக்குப்பதிவு சதவீதம் 52.31 ஆகும்..

கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் பதிவான மொத்த வாக்குகள் சுமார் 1,96,959 எனக் கணக்கிடப்படுகிறது. இந்த முறை 1,84,423 வாக்குகள் பதிவாகியுள்ளதால், முந்தைய தேர்தலைவிட 12,536 வாக்குகள் குறைவாகவே பதிவாகியிருக்கின்றன.

அதேபோல கடந்த முறை அதிமுக வென்ற நிலையில், இப்போது தவெக வென்றுள்ளது.. வாக்குப்பதிவில் ஏற்பட்டுள்ள இந்த குறைவும், கட்சிகள் பெற்ற வாக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன..

இந்த ஒப்பீடு சொல்வது என்ன?

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும், பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. தாராபுரத்தில் தவெகவின் வாக்குகள் 20,403 அதிகரித்துள்ளன, மதுராந்தகத்தில் 5,729 அதிகரித்துள்ளன. அதேசமயம் 2 தொகுதிகளிலும் அதிமுகவின் வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. திமுகவின் வாக்குகளும் 2 தொகுதிகளிலும் மளமளவென சரிந்துள்ளன..

இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது அல்லது குறைந்தது என்பதன் அடிப்படையில் மட்டுமே வாக்காளர்களின் மனநிலையை முழுமையாக முடிவு செய்ய முடியாது... மொத்த வாக்குப்பதிவு, வேட்பாளர் மாற்றம், கூட்டணி அமைப்பு உள்ளிட்ட விஷயங்களையும் சேர்த்து பார்த்தால்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் அரசியல் மாற்றத்தை இன்னும் தெளிவாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+