"உன் கூடவுமா அரசியல் பண்ணனும்"..இயக்குநர் போஸ் வெங்கட் மிட்நைட் டோஸ்.. ரவுண்டு கட்டிய விஜய் நண்பாஸ்
சென்னை: திமுகவைச் சேர்ந்த இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட், நடிகர் விஜய்-க்கு எதிராக நள்ளிரவில் பதிவிட்ட ட்வீட்டால் எக்ஸ் தளம் விடிய விடிய ரணகளமாகிவிட்டது. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் என்ற இயக்குநர் போஸ் வெங்கட்டின் இந்த பதிவுக்கு எதிராக விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தற்போது வரை தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.
நடிகரான போஸ் வெங்கட், இயக்குநராக கன்னி மாடம் மற்றும் தற்போது வெளியான சார் திரைப்படங்களை இயக்கி உள்ளார். அண்மையில் கங்குவா பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, அரசியலுக்கு வர வேண்டும் என போஸ் வெங்கட் அழைப்பு விடுத்து பேசியது பேசுபொருளானது. திமுகவைச் சேர்ந்தவர் இயக்குநர் போஸ் வெங்கட்.

தற்போது விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சை போஸ் வெங்கட் கடுமையாக விமர்சித்து நள்ளிரவில் எக்ஸ் பக்கத்தில் ட்வீட் போட்டிருந்தார். அதில், "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்" என்பதுதான் போஸ் வெங்கட் போட்ட ட்வீட்.

இந்த பதிவுக்கு உடனடியாகவே விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பதிலடி தர தொடங்கினர். தற்போது வரை இந்த அக்கப்போர் எக்ஸ் தளத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. "யாரோ ஒரு நடிகரின் விழாவிற்கு அவரை பார்க்க வந்த சில ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடுவில் ஒரு நாலு வரி பேச நீ எவ்வளவு மனப்பாடமும் ஒப்பிப்பும் செய்தாய்? அப்போது தன்னை மட்டுமே பார்க்க வந்த ஐந்து லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரம் பேச அவர் பல மடங்கு மனப்பாடமும் ஒப்பிப்பும் செய்வதில் எந்த தவறும் இல்லை!" என்பது உள்ளிட்ட பல பதில்கள் அந்த பதிவில் தரப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications