இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய்
சென்னை: பனையூரில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த 60 பேர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தினார். அப்போது பேசிய விஜய், "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை.. நான் அரசியலுக்கு வந்தபிறகு எனக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலைகளை பாருங்கள்.." என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் இன்று முதல் வேட்பாளர் நேர்காணலை தொடங்கியுள்ளார். இன்று நேர்காணலில் பங்கேற்க வந்த வேட்பாளர்களிடம் விஜய் மனம் விட்டு பேசியதாகவும், அரசியல்தான் தனக்கு எல்லாம் எனவும் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் வரும் சட்டசபை தேர்தல் தான் இலக்கு என அதற்காக வேலை செய்து வருகிறார். இதுவரை இல்லாத ஒரு தேர்தலாக இந்த 2026 சட்டசபை தேர்தல் இருக்கும் என்று விஜய் கூறி வருகிறார்.
தமிழம் முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்த பிளான் செய்த விஜய்க்கு கரூர் சம்பவம் பிரேக் போட்டது. பின்னர் ஜனநாயகன் படம் வந்த பிறகு பிரசாரத்தை தீவிரப்படுத்தலாம் என நினைத்த விஜய்க்கு அதிலும் பின்னடைவே ஏற்பட்டது. ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினையால் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் போனது.
தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி வந்த விஜய்க்கு அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் காங்கிரசை நம்பி இருந்த விஜய்க்கு அதிலும் ஏமாற்றம் தான். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் தனித்து விடப்பட்டுள்ளார். இந்த சூழலில் தான் மகளிர் தினத்தை ஒட்டி மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
ஐந்து ஐந்து பேரை அழைத்து நேர்காணல்
இதையடுத்து தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் விருப்பமனுக்களை பெற்றிருந்த நிலையில் அவர்களில் 60 பேரிடம் இன்று நேர்காணல் நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். இதன்படி சிபிஐ விசாரணைக்கு விலக்கு கேட்டுவிட்டு திட்டமிட்டப்படி வரும் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 60 பேரிடம் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினார்.
வேட்பாளர் தேர்வில் விஜய்யே களமிறங்கி இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதாவது ஒரு தொகுதிக்கு 3 பேரை விஜய் நேர்காணல் நடத்த அழைத்து இருக்கிறார். பிப்ரவரி மாதம் பெறப்பட்ட விருப்ப மனுக்களில் இருந்து ஏற்கெனவே 50 வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஐந்து ஐந்து பேரை அழைத்து விஜய் நேர்காணல் நடத்தியுள்ளார். நேர்காணல் நடத்தியபோது விஜய் சிலவற்றை பேசியதாகவும் கூறப்படுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து இருக்கிறேன்
குறிப்பாக, "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை.. நான் அரசியலுக்கு வந்தபிறகு எனக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலைகளை பாருங்கள்.. உங்களை வேட்பாளராக தேர்வு செய்து இருக்கிறேன்.. வெற்றி பெறுவதற்காக உழைப்பீர்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனக்கு நம்பிக்கையாக இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.. உங்கள் தொகுதியில் நீங்கள் வெற்றி பெறுவது உங்கள் கடமை.. உங்கள் பொறுப்பு.. அதற்கு ஏற்ப வேலைகளை செய்யுங்கள்.." என்று பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பூத் கமிட்டிகளை சரியாக அமைத்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் விஜய் வேட்பாளர்களிடம் நேரடியாகவே கேட்டு உறுதி செய்துள்ளார்.
மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு
முன்னதாக சென்னையில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் (தியாகராய நகர்), அருண்ராஜ் (திருச்செங்கோடு), ராஜ்மோகன் (எழும்பூர்), மரிய வில்சன் (திருவொற்றியூர்) ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட 50 வேட்பாளர்களையும் தங்கள் தொகுதியில் பணிகளைத் தொடங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது விஜய்க்கு அரசியலில் பெரும் அடியை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விவாகரத்து பிரச்சினை வொர்த் இல்லை என்று கூறியது அவரது கட்சி பெண் நிர்வாகிகள் மத்தியிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உங்களை பார்த்து தானே உங்கள் ரசிகர்களும், தொண்டர்களும் இருப்பாங்க.. அப்படி இருக்கையில் நீங்களே இப்படி பேசலாமா என்றும் கூறியிருந்தனர்.
வீட்டிலேயே பெண்களை பாதுகாக்க தெரியாதவர் எப்படி முதல்வர் ஆகி பெண்களுக்கு பாதுகாப்பை கொடுப்பார் என்றும் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இதேபோல் பாஜக ஒரு பக்கம் ஜனநாயகம் படம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐயை வைத்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் வேட்பாளர்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் விஜய் இப்படி பேசியதாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications