திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். முதல் 15 பேரில் 4 இடங்களை அதிமுகவிலிருந்து வந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், சத்தியபாமா, ஜே.சி.டி.பிரபாகர் என 4 பேரும் அதிமுகவில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர் பட்டியலிலும் முன்னாள் அதிமுகவினர் பலர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2024 சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகளை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார். அந்த வகையில் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிருக்கிறார்.

தொடர்ந்து வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் விஜய். அதன்படி, தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூர் - வெங்கட்ராமன், வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா, கோபி - செங்கோட்டையன்,திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார், திருச்செங்கோடு - அருண்ராஜ், குமாரபாளையம் - விஜயலட்சுமி, சைதாப்பேட்டை - அருள்பிரகாசம், எழும்பூர் - ராஜ் மோகன், லால்குடி - கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு - சத்தியபாமா, ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் - வி.எஸ்.பாபு, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விஜய் அறிவித்துள்ள இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் பதினைந்து பேரில் நான்கு பேர் முன்னாள் அதிமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த கேஎஸ் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவரது ஆதரவாளர் தான் சத்தியபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியைச் சேர்ந்த கூப்பா கிருஷ்ணன் அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு எடப்பாடி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி ஆரம்பித்தவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜேசிடி பிரபாகரும் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கடுஹ். இப்படியாக அதிமுகவின் முக்கிய முகங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகம் மட்டுமல்லாமல் திமுகவிலும் ஏராளமான முன்னாள் அதிமுகவினர் சீட்டு பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜி, சேகர் பாபு, எவ வேலு , கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியவரும் வேட்பாளர்களாக களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications