Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் விவாதம்: கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா மீது தமிழக சட்டசபையில் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று பேசியதாவது:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் நம்முடைய சமூக நீதி கோட்பாட்டிற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு காரணமாக இருந்த தமிழ் மண்ணிலிருந்து தமிழக சட்டமன்றத்தால் இயற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியிருப்பது என்பது ஏற்கக்கூடிய செயல் அல்ல. 8 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழக சட்டமன்றம் இயற்றியிருக்கின்ற அந்தச் சட்ட மசோதாவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிரிவு 254 ன்படி மாண்புமிகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TVK Chief Velmurugan urges to Bring education back under State List

அதுதான் அவர் தனது அரசியல் கடமையைச் செய்வதாக அரித்தம். மாநில அரசுக்கு அனுப்பி வைக்கின்ற சட்டங்களை மாநிலப் பட்டியலில் இருக்கிற சட்டங்களை மறு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதற்கு ஆளுநருக்கு உரிமை. ஆனால், மத்திய அரசியீ பட்டியலில் இருப்பதையோ, ! பொதுப் பட்டியலில் இருப்பதையோ கவர்னர் அவர்கள் திரும்பவும் நம்முடைய மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பது என்பது இந்திய அரசியல் சாசன சட்டத்தை மீறிய ஒரு செயலாகும். இதை நம்முடைய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், நீதிபதி அல் தாமஸ் கபிர் அவர்கள் தலைமையிலான மூவர் நீதிபதிகளும் சரி அல்லது தனி நீதிபதியாக இடம்பெற்ற நீதிபதி பானுமதி அவர்களும் சரி, ஏற்கெனவே entrance examination என்று சொல்லக்கூடிய நுழைவுத் தேர்வை இரத்து செய்வதற்கு நீதிபதி மிஸ்ரா அவர்கள் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கு, சமூக நீதியைக் காப்பதற்கு ஒரு மாநில அரசால் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று, அந்த மாணவர்களுக்கு அந்த மாநில அரசு வழிகாட்டுகிற நெறிமுறைகளின் நடைபெறுகின்ற இந்த மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கின்ற செயல்; ஏற்புடைய செயல் அல்ல. இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஓடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, சிறுபான்மையின மாணவச் செல்வங்கள் இந்த நீட் என்கிற நுழையாத் தேர்வின் காரணமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

குறிப்பாக, மீண்டும் அனுப்பப்படவிருக்கும் இந்த சட்ட மசோதா, கடந்த கால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதிவிகிதம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கிற ஒரு சட்டமாகத்தான் இந்த சட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். தற்போது, பல்வேறு நீட் ஆதரவாளர்கள், இந்த நீட் தேர்வின் காரணமாக, கிராமப்புறத்தில் இருக்கிற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது தவறு. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த கடந்த ஆட்சி கொண்டு வந்த, இந்த ஆட்சி நடைமுறைப்படுத்துகிற 7.5 சதளிகிற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் கிராமப்புற ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு 400-க்கும் பேற்பட்ட இடங்களிலே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

TVK Chief Velmurugan urges to Bring education back under State List

குறிப்பாக, இந்த ஆண்டு 16 இலட்சத்து 14 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு, தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், தேர்வு எழுத வந்தவர்களுடைய எண்ணிக்கை 15 இலட்சத்து 44 ஆயிரம் பேர். கடந்த ஆண்டு 2 இலட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை, இந்த ஆண்டு 70,014 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஏன்? நீட் தேர்வு என்று சொன்னாலே மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது, பதற்றம் ஏற்படுகிறது. மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆதலால், தேர்வு எழுத விண்ணப்பித்துவிட்டு, ஆண்டுக்கு 1 இலட்சம் பேர், 2 இலட்சம் பேர் என தேர்வு எழுதாமலேயே இருக்கிறார்கள் என்றால், இந்த நீட் தேர்வு வரவேற்கக்கூடிய தேர்வா? மாணவர்களை மனச்சிதைவுக்கு உள்ளாக்குகிற தேர்வு.தங்கை அளிதாவில் தொடங்கி இன்றைக்கு 20-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மாணவர்கள், 12 ஆம் வகுப்புத் தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்று தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிற அவலம் தற்போது இந்த மண்ணிலே ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் நீட் தேர்வு. ஆக, நீட் தேர்வு என்பது ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை மேல்நிலைக் கல்வி என்று சொல்லக்கூடிய, உயர் கல்வி என்று சொல்லக்கூடிய மருத்துவக் கல்விக்கும், U.G, P.G. என்கிற உயர் கல்விக்கும் செல்லவிடாமல் தடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தேர்வு முறை. அந்தத் தேர்வு முறையை தகர்த்தெறிவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இந்த சட்டமன்றத்தில் மீண்டும் இயற்றப்படுகிற இந்த சட்ட மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சி மனதார வரவேற்கிறது. பாராட்டுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி நாள் கேட்கிறேன், ஒரு தேர்வு என்று சொன்னால்,
அந்தத் தேர்வில் வெற்றி பெறுகிற அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்கிறதா? கடந்த ஆண்டு 8 இலட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால், இந்தியா முழுவதும் 2 இலட்சம் இடங்கள் பட்டுமே உள்ளன. P.G.-க்கு 14 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால், தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் 1.25 இலட்சம் பேர். ஆக, ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அந்தத் தேர்விலே வெற்றி பெற்றவர்களுக்கு உரிய இடங்கள் வழங்க முடியாத ஒரு தேர்வு முறை ஏற்புடையதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவ கல்லூரியின் கல்விக் கொள்ளையை தடுப்பதற்கு இந்த நீட் தேர்வு காரணம் என்று இன்னும் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். தற்போது P.G.-க்கு 50 இலட்சம் ரூபாய் கட்டணம், white-ல் amount வாங்கிக்கொள்வதற்கு மருத்துவக் கல்லூரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது சுயநிதிக் கல்லூரிகளில், நீட்
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 23 இலட்சம் ரூபாய். கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறதா? 5 ஆண்டுகளுக்கு என்ன கட்டணாம்? 1% கோடி ரூபாய் இருந்தால்தான் ஒரு மாணவன் மருத்துவக் கல்வியை கற்க முடியும்.

நீட் தேர்வுக்கான coaching centre-ல், கட்டணம் 3 இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை வாங்கப்படுகிறது. ஆக, 3 இலட்சம் ரூபாய், 5 இலட்சம் ரூபாய் என செலவு செய்து, இந்த coaching centre-ல் சேர்ந்து, பயின்று, தேர்ச்சி பெறுகிறார்கள். அவ்வாறு தேர்ச்சி பெற்றாலும்கூட, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்றால், இல்லை. ஆக, நீட் தேர்வு என்பது ஒரு சமூக அநீதியான ஒரு தேர்வு, ஏழை எளிய மக்களை மருத்துவம் பயில நுழையவிடாத ஒரு தேர்வு, உயர் கல்வி படிக்கவிடாமல் தடுக்கிற ஒரு தேர்வு. ஆக, அந்தத் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும், இந்த மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றால், இந்தியாவிற்கே வழிகாட்டியாக சமூக நீதி இயக்கத்தை வழிநடத்துகிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கண்டிப்பாக மாநில உரிமைக்குரிய இந்த கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து, இந்தியாவிற்கு வழிகாட்டுவதற்கு இந்த சட்டமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து, இந்த நீட் மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக வரவேற்று அமர்கிறேன்.

இவ்வாறு பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+