பெரம்பூர் பிரசாரம் நாளை ரத்து.. போட்டியிடும் தொகுதியிலேயே திடீரென பின்வாங்கிய விஜய்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். நாளை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தான் திடீரென்று விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டசபை தொகுதியிலேயே பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதனால் தவெகவினர் சோர்வடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றார். ஒன்று சென்னை பெரம்பூர். இன்னொன்று திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியாகும். தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. ஏப்ரல் 23ல் தேர்தல் நடக்கும் நிலையில் ஏப்ரல் 21ம் தேதியுடன் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் தலைவர்கள், கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டசபை தொகுதியில் நாளை பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
வீடு வீடாக வாக்கு சேகரிக்க முடிவு
இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. போட்டியிடும் தொகுதி என்பதால் வழக்கமான பரப்புரை, ரோடுஷோ ஆகியவற்றுக்கு பதில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையும் அனுமதி வழங்கி இருந்தது. இதனால் விஜய் நாளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தயாரானார்.
நாளைய பிரசாரம் ரத்து
நாளைய பிரசாரத்தையொட்டி இன்றே விஜய் பெரம்பூரில் உள்ள தேர்தல் பணிமனைக்கு சென்று பெண் நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சியின் சின்னமான 'விசில்' சின்னத்தை வரைந்தார். தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் திடீரென்று பெரம்பூரில் விஜயின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications