பாசிசம் பாயாசம்.. சினிமா வசனம் எல்லாம் கொள்கையா? விஜய்க்கு ப.சிதம்பரம் பொளேர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாசிசம்.. பாயாசம் என சினிமா வசனத்தை பேசுவது எல்லாம் எப்படி ஒரு கட்சியின் கொள்கையாக முடியும்? என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதெல்லாம் இப்போதே எப்படி சொல்ல முடியும்? எனவும் நடிகர் விஜய்க்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு. விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகள் சர்ச்சைகளாகவும் அதிர்வலைகளாகவும் வெடித்திருக்கிறது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

விஜய் மீது விமர்சனம்: ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு என விஜய் பேசியதை பல்வேறு கட்சிகள் வரவேற்றாலும் பாசிசத்தையும் பாயாசத்தையும் ஒப்பிட்டுப் பேசியதை அனைத்து கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. விஜய், பாஜகவை எதிர்க்க அஞ்சியே இப்படி பேசுகிறார் என்பதும் முன்வைக்கப்படுகிற விமர்சனம்.

விஜய்க்கு வாழ்த்துகள்: இந்த நிலையில் நடிகர் விஜய் பேச்சு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியும் மகிழ்ச்சி தராதவையும்: புதிய கட்சியின் ஒரு கோட்பாடாக, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி இருக்கிறார். அந்த கட்சி வரும் நாட்களில் தன்னுடைய கொள்கைகளை எல்லாம் சொல்லும் என நினைக்கிறேன். ஆனால் அவர், காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகளை வலியுறுத்தி, பின்பற்றிப் பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சியைத் தரவில்லை.

கூட்டணி ஆட்சி: எதுவாக இருந்தாலும் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துகள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமா? என்பதை விஜய்யைத்தான் கேட்க வேண்டும். இது சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்பதை தேர்தல்தான் முடிவு செய்ய வேண்டும். சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என இப்ப எப்படி சொல்ல முடியும்?

மத்தியில் கூட்டணி ஆட்சி: ஒரு காலத்தில் மத்திய அரசில் தனிக்கட்சிதான் ஆட்சி செய்யனும் என்று இருந்தது. 1996-க்குப் பிறகு மத்திய அரசில் பல கட்சிகள் ஆட்சி செய்கின்றன. ஆக சாத்தியம் இல்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகும். அது போகப் போகத்தான் சொல்ல முடியும்.

சினிமா வசனம்: அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா? என பேசுவது எல்லாம் சினிமா வசனங்கள் மாதிரிதான். சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக்கிடாதீங்க.. சினிமா வசனம் மாதிரி தெரியுது. அவர் கட்சி தொடங்கி இருக்கிறார் நல் வாழ்த்துகள். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+