Thadi Balaji: விவாகரத்து கேட்ட சங்கீதா! "கலங்காதே நண்பா.." விஜய்க்கு சப்போர்ட்டாக குதித்த தாடி பாலாஜி
சென்னை: தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய்க்கு நடிகர் தாடி பாலாஜி ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எதுவும் மாறட்டும்... உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது.
இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம்,
கலங்காதே நண்பா... உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாடி பாலாஜி தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் மற்றும் காமெடியன். அவர் பிக் பாஸ் தமிழ் 2 (2018) நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் (2022) நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவரது நகைச்சுவை பாணி, வேகமான டயலாக்கள் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் "ஜால்கோ தாடி பாலாஜி" என்று அழைக்கப்படுகிறார்.
1997-இல் நந்தினி படத்தில் டிரைவர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் லிங்கா, சுறா, மாப்பிள்ளை போன்ற படங்களில் துணை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
பாலாஜி சென்னையைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி நித்யா, மகள் ஆகியோர் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தவர். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியபோது ஆதரவாளராக இணைந்து, பரப்புரை செய்தார். விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்தி கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போட்டார். ஆனால் தவெகவில் பொறுப்பு வழங்கப்படாத விரக்தியால் கடந்த டிசம்பரில் கட்சியை விட்டு விலகினார்.
பின்னர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியில் (LJK) பாலாஜி இணைந்தார். 2026 ஜனவரியில் LJK-யின் பரப்புரை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது LJK-யில் செயல்பட்டு வருகிறார்.
புதுவை சட்டசபை தொகுதிகளில் தாடி பாலாஜி எல்ஜேகே சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிறைய நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அவருடனான தொடர்பை துண்டித்துவிடுவதாக உறுதியளித்த கணவர் விஜய், இன்று வரை அந்த நடிகையுடனான உறவை தொடர்ந்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த நடிகை, தனது கணவர் விஜய்யுடன் பல்வேறு பொது இடங்களுக்கு செல்வதும் அங்கு அவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு, அவரிடம் இருந்து நிரந்தர ஜீவனாம்சம் பெற்றுத் தரவும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications