நாளை தவெக மாநாடு.. சரியாக விஜய் பேச போகும் நேரம் பார்த்து! சன் டிவி கையில் எடுத்த பிளான்.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் விஜய் சுமார் 2 மணி நேரம் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. தவெக மாநாடு பற்றிய எதிர்பார்ப்பு அவரது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி, நாளை மாலை ஒளிபரப்பாகும் படத்தினை மாற்றி அமைத்துள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. கட்சியின் பாடல், கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய விஜய் கொள்கை, கோட்பாட்டினை சொல்லவில்லை. கட்சியின் கொள்கை மற்றும் கொடிக்கான விளக்கம் உள்ளிட்டவற்றை மாநாட்டில் சொல்வதாக சஸ்பென்ஸ் வைத்தார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay


இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்னவாக இருக்கும்?, விஜயின் அரசியல் பார்வை, அரசியல் பாதை எப்படி இருக்கும்? என பலரும் எதிர்பார்க்க தொடங்கினர். திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட விஜய் என்ன பேசுவார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பலரும் எதிர்ப்பார்ப்பார்கள். தற்போது விஜய் முதன் முதலாக அரசியல் பேச உள்ளார். இதனால், அவரது கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்களும் இந்த மாநில மாநாட்டில் விஜய் என்ன பேச உள்ளார் என்பது பற்றி கவனிக்க ரெடியாகி வருகிறாரக்ள்.

தவெக மாநாட்டில் விஜய் சரியாக 6 மணியளவில் பேச தொடங்குவார் என சொல்லப்படுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடி விஜய் என்ன பேசுவார் என்பதை பார்க்க தயாராகி உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் விஜயின் மாநாடு பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் பார்க்கும் சேனலாகவும், திமுகவின் நட்பு தொலைக்காட்சியான சன்டிவியில் முத்து படம் நாளை ஒளிபரப்பப்படும் என்று முதலில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முத்து படத்திற்கு பதிலாக ஜெயிலர் படத்தை ஒளிபரப்ப சன் டிவி முடிவு செய்துள்ளது. விஜயின் மாநாடு பற்றிய பேச்சு அதிகரித்துள்ளதால், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்து இருக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்களுக்கு நல்ல பிடித்தமான படங்களையே வழக்கமாக ஒளிபரப்புவார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது ரஜினி, விஜய் மற்றும் மெகா ஹிட் அடித்த படங்கள் ஒளிபரப்பப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை புதுப்படங்களை பெரும்பாலும் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள். ஆனால், கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் படத்தை ஒளிபரப்புவதாக அறிவித்து இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

விஜயின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடப்பதாலும், விஜய் சரியாக மாலை 6 மணிக்கு தான் பேச ஆரம்பிப்பார் என்பதாலும் பலரது கவனம் முழுக்க அங்கு தான் இருக்கும். இதனால் மிகப்பெரிய ஹிட் படத்தை ஒளிபரப்பு செய்து அவர்களை சன்டிவி பக்கம் இழுப்பதற்காக ஜெயிலர் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்திருப்பதாக நெட்டிசன்கள் காரசரமாக பதிவு போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+