தவெக + காங்கிரஸ்? 2026ல் எதிர்பாரா ட்விஸ்ட்! அறிவாலய கெடுபிடியால் கடுகடுப்பில் கதர்! ராகுல் அப்செட்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தரப்புடன் பேச்சு வார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், 2016 சட்டமன்ற தேர்தலைப் போல தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி உருவாவதற்கான சாத்திய கூறுகள் தென்பட தொடங்கி இருக்கின்றன. அந்த 3வது கூட்டணி 2026ல் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா? அல்லது மற்றொரு மக்கள் நல கூட்டணியாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த தேர்தல்களைப் போல இந்த தேர்தலும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை போட்டி சற்று வித்தியாசமாக இருக்கிறது. தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியல் களத்தில் முதன்முறையாக களமிறங்குகிறார்.
வழக்கம் போல் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்து தான் போட்டி என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
இப்படி நான்குமுனை போட்டி உருவாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு கட்சிகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிகார பகிர்வு என விஜய் முதல் மாநாட்டிலேயே அறைகூவல் விடுத்தும் எந்த கட்சியும் அவரை கண்டுகொள்ளவில்லை. இருந்த போதும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி வந்த விஜய் தமிழகத்தின் முன்னாள் ஆளுங்கட்சியும் தேசிய அளவில் எதிர்க்கட்சியமான காங்கிரசை தான் அப்படி குறிப்பிட்டார் என தகவல்கள் உலாவின. ஆனால் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என காங்கிரஸ் தலைவர்களை பேசி வந்ததை கவனிக்க வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாள்தோறும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுகவின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் பேச்சு நடந்து இருக்க காங்கிரஸ் திமுக இடையிலே சிக்கல் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்னெடுத்து வரும் நிலையில் அதற்கு திமுக உடன்படவில்லை.
காங்கிரஸ் கூட்டணி பேச்சு
கூடுதல் தொகுதிகள் ராஜ்யசபா சீட்டு என காங்கிரஸின் அனைத்து கோரிக்கைகளையும் திமுக இதனால் ராகுல் காந்தி மிகுந்த நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படுகிறது . திமுக தலைவர் ஸ்டாலின் முதல் பிறந்தநாளிற்கு அவரை வெகுவாக பாராட்டிய ராகுல் காந்தி இந்த முறை ஏதோ பெயருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதற்கு பெயருக்கு நன்றி சொல்லியிருக்கிறார் மு க ஸ்டாலின். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் தரப்பில் சில தகவல்கள் கசிய விடப்பட்டுள்ள நிலையில் அதனை மறுத்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
மூன்றாவது கூட்டணி
ஆனால் உண்மையில் தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் எனவும், 50 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸுக்கு சீட்டு ஒதுக்கப்படும் எனவும், அனைத்து தொகுதிகளுக்கும் விஜய்யும் ராகுல் காந்தியும் பிரச்சாரத்திற்கு செல்வார்கள் என முதற்கட்ட பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வரும் அது தமிழகத்தின் மூன்றாவது கூட்டணி குறித்த அறிவிப்பாக இருக்கும் என்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications