தமிழ்நாட்டில் தவெகவுக்கு 18%.. காங்கிரஸ் கட்சிக்கு 12% வாக்கு வங்கி.. சொல்வது பிரவீன் சக்ரவர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியல் செய்து காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, அந்த எண்ணம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிகமாக பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் திமுக எம்பி கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனாலும் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான முடிவு எட்டப்படாததால், இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

TVK Congress Alliance

காங்கிரஸ் கூட்டணி

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட சிலர் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தவெக நிர்வாகிகளுடனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தியும் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார்.

பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி

இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது புதிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்குமா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. தவெக தரப்பும் நேரடியாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

காங்கிரஸ் பலவீனம்

அதில் பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி வருகிறது. காங்கிரஸ் கட்சி பலமாக இருந்தால் தான் கூட்டணியும் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலின் போது அமைக்கப்படுவது. தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக சொல்லவில்லை. பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கூட்டணியால் பலவீனம் அடைந்துவிட்டது.

12% வாக்குகள்

இந்த எண்ணம் இப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வந்துள்ளதாக கருதுகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அங்கு காங்கிரஸ் வாக்குகள் பிரிந்து கிடக்கிறது. பாஜகவை முழுமையாக எதிர்க்கக் கூடிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது. தண்ணீரையும், எண்ணெய்யையும் பிரித்து பார்த்தால் மட்டுமே, காங்கிரஸ் கட்சியின் வலிமை தெரியும் என்றார்.

2014ல் காங்கிரஸ் நிலை என்ன?

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அப்போது 39 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தமாக 4.4 சதவிகித வாக்குகளை பெற்றது. இதன்பின் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதன் காரணமாக 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றது. அதேதான் 2024 லோக்சபா தேர்தலிலும் நடந்தது.

தவெகவுக்கு 18% வாக்கு

ஏற்கனவே தவெகவுக்கு தமிழ்நாட்டில் 17 முதல் 18 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். இதனால் தவெக - காங்கிரஸ் கட்சி இணைந்தால் 30 சதவிகித வாக்குகளை எளிதாக கைப்பற்றலாம் என்று சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் 12 சதவிகித வாக்குகளை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பு இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+