தவெக தேர்தல் அறிக்கை.. விஜய் தந்த 10 உத்தரவாதங்கள்.. கவனிக்க வேண்டிய கடைசி பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை 2026' என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவி தொகை வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும், முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.

தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 10 உத்தரவாதங்களை அப்படியே பார்ப்போம்.

மகளிர் மேம்பாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; 6 விலையில்லா சிலிண்டர்கள்; மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி; மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.

TVK Election Manifesto The 10 Guarantees Given by Vijay The Final Point Worth Noting

இளைஞர் முன்னேற்றம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப்; 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்; தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்; அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.

உலகத்தரக் கல்வி

உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்; ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள்; ஏஐ (Artificial Intelligence) மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.

விவசாயிகள் நலன்

நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி; பயிர்க் கடன்கள் தள்ளுபடி; MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500; 5 லட்சம் சோலார் பம்புகள்; தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100 சதவீத பயிர்க் காப்பீடு.

சுகாதாரமான தமிழ்நாடு

குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு.

மீனவர் நலன்

தடைக்கால நிவாரணம் ரூ.27,000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை; ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடு.

சமூகப் பாதுகாப்பு

முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு; நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.

தமிழ்நாடு வளர்ச்சி

2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம்; MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக 'மாஸ்டர் பிளான்'; தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.

அரசு ஊழியர் நலன்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை (OPS); ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம்.

நல்லாட்சி

லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்; காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்; நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்." இது தான் அந்த 10 உத்தரவாதங்கள் ஆகும்

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த 10 உத்தரவாதங்களை உற்று நோக்கினால், அரசியல் நோக்கர்களின் பார்வையில் விஜய்க்குச் சாதகமாகப் பார்க்கப்படும் மிக முக்கியமான 5 விஷயங்களை பார்ப்போம்

இளைஞர்களைக் கவரும் 'டெக்' அரசியல்

மற்ற கட்சிகள் வழக்கமான இலவசங்களில் கவனம் செலுத்தும்போது, விஜய் "AI அமைச்சகம், AI பல்கலைக்கழகம், AI நகரம்" எனப் பேசுவது முதல்முறை வாக்காளர்களையும் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களையும் ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. ஏஐ மூலம் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி என்பது இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான மிக நவீனமான வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான கூடுதல் 'டோஸ்'

தற்போது நடைமுறையில் இருக்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'யை விட (ரூ.1,000), விஜய் ரூ.2,500 என அறிவித்திருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதோடு ஒரு சவரன் தங்கம் + பட்டுச்சேலை என்பது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் திருமணச் சுமையைத் தொடும் ஒரு எமோஷனல் விஷயம்.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு நேரடித் தீர்வு

வெறும் அரசு வேலை என்று சொல்லாமல், ரூ.4,000 உதவித்தொகை மற்றும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் (Stipend உடன்) என்பது கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தரும் வாய்ப்பு உள்ளது, , 75% தமிழர்களுக்கே வேலை என்ற 'தமிழ் வேலைவாய்ப்பு கிரெடிட் சிஸ்டம்' பெரும் பேசுபொருளாகும்.

விவசாயிகளுக்கான முதலீட்டு உதவி

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களைத் தாண்டி, நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி என்பது டெல்டா மற்றும் தென் மாவட்ட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

நல்லாட்சி முழக்கம்

சட்டமன்றத்தில் ஒரு நாளை மக்கள் மனுக்களுக்காக ஒதுக்குவது மற்றும் 10 சதவீதத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம் என்பது "நேரடி ஜனநாயகம்" பேசும் விஷயம். இது ஊழல் மற்றும் அதிகாரத்துவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு "நமக்கும் அதிகாரத்தில் பங்கு இருக்கிறது" என்ற எண்ணத்தை விதைக்கும் வாய்ப்பு உள்ளது.

சவால் என்ன

விஜய்க்கு இதில் சாதகமாக இருந்தாலும், நிதியாதாரம் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாகும். ரூ.10.5 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தில், இந்த பிரம்மாண்டமான இலவசங்கள் மற்றும் உதவித்தொகைகளுக்கான நிதியை எப்படித் திரட்டுவார்? 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது மிகப்பெரிய இலக்கு. அதற்கான விரிவான திட்டமிடல் வேண்டும். அத்துடன் மிகப்பெரிய விஷயங்கள் மிகக்குறுகிய காலத்தில் நடக்க வேண்டும். அதுவும் சவாலானது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+