தவெகவின் தேர்தல் சின்னம் என்ன? எப்போது கிடைக்கும்? டெல்லியிலிருந்து வெளியான முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், பொது சின்னத்தை கோரி விண்ணப்பிக்க உரிமை இருக்கிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகமும் விண்ணப்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்த விண்ணப்ப நிலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறது. ஒன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள். இன்னொன்று, பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள். இதில் இரண்டாவது பிரிவில் தவெக வருகிறது.

TVK Election Vijay

தவெகவின் நிலை என்ன?

மாநில கட்சி என, ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் எனில், தேர்தலில் 6% வாக்குகளை பெற வேண்டும். தவிர குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் மொத்த தொகுதிகளில் 3% இடங்களை வெல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 234 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 3% எனில் 7 தொகுதிகள். இந்த தகுதிகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓகேதான்.. ஆனால் குறைந்து 8% வாக்குகளை பெற வேண்டும்.

பொது சின்னம்

தவெக மேற்குறிப்பிட்ட எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் கட்சி இன்னும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்படி இருக்கையில், தவெக என்பது பதிவு செய்யப்பட்ட.. ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சிதான். இதுபோன்ற கட்சிகள் தேர்தலில் பங்கேற்கும்போது, பொதுவான சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திடம் கோரலாம். தவெகவும் கோரியுள்ளது.

விண்ணப்பத்தின் நிலை

தற்போது இந்த விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968-இன் பத்தி 10B-இன் கீழ் பொதுச் சின்னம் கோரி தவெக அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்றும், உரிய நேரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களுக்கு அந்த கட்சிக்கு ஒரு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவு கணக்கு

பத்தி 10B-இன் கீழ் பொதுச் சின்னம் பெறும் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி, கடந்த 3 நிதியாண்டுகளுக்கான நன்கொடை அறிக்கை மற்றும் ஆண்டு தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளது. தவெக-வை பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டிற்கான நன்கொடை மற்றும் ஆண்டு தணிக்கை அறிக்கைகளை முறையாகத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கும் வழக்கமாக நடப்பது போலவே, தேர்தல் அறிவிப்புக்குச் சற்று முன்னதாக தவெக-க்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+