இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முதல் நாளிலேயே வில்லிவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இன்று (மார்ச் 30) பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய். அதைத்தொடர்ந்து பெரம்பூர் பணிமனை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அதிகமானோர் குவிந்திருந்தனர். சிலர் பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு விஜய்யை பார்க்க ஓடும் காட்சிகளும் வெளியாகின. முதல் பிரச்சார இடமான பெரம்பூரில் இருந்து இரண்டாவது இடமான கொளத்தூருக்கு செல்ல முடியாமல் பேரணியை பாதியிலேயே நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என தவெக குற்றம்சாட்டியுள்ளது.
தவெக தலைமைக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சூழலை முடக்க கபட நாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?
முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா? அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications