இரவோடு இரவாக தவெக நிர்வாகி கைது.. 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் அதிரடி கைது!
சென்னை: சென்னை ஆர்.கே. நகரில் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் வீட்டிற்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் களம் இப்போது தான் ஓய்ந்து இருக்கிறது. கடந்த இரு மாதங்களாகவே மாநிலத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இப்போது சற்று அமைதி திரும்பியிருக்கிறது.

இதற்கிடையே சென்னை ஆர்கே நகரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்கே நகர் 43வது வார்டு தவெக வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டிற்கு வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, அதை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் தினேஷ் அத்துமீறியது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், திங்கள்கிழமை வாக்கு எண்ணும் பணிகளில் தினேஷ் ஈடுபட்டிருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது அவரை கைது செய்துள்ளனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications