அடேங்கப்பா என்னா ஸ்பீடு.. விசில் சின்னம் ஒதுக்கிய அடுத்த நொடி புஸ்சி ஆனந்த் செய்த காரியத்தை பாருங்க
சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை பொது சின்னமாக வழங்கியுள்ளது. விஜய்க்கு சின்னம் கிடைத்ததை அடுத்து தவெகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் சின்னம் அறிவித்த உடனேயே விசிலை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிக்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சிக்கு விசில் சின்னம்
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் ஆயத்தமாகி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு தவெக கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்து இருந்தது.
இதில் விஜய்யின் தவெக மக்களுக்கு பரீட்சையமான விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 விருப்ப சின்னங்களை கேட்டு அதில் ஒன்றை தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று விஜய்க்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இனிப்பு வழங்கி தவெகவினர் குஷி
விஜய்க்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் விசில் சின்னம் டிரெண்ட் ஆனது. தவெகவினரும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் பரப்பினர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக சாலையில் சென்ற மக்கள், கடைகளில் விசில் சின்னத்தை வழங்கினார்.
இதேபோல் தவெக தொண்டர்களும் பல்வேறு பகுதிகளில் விஜய்க்கு விசில் சின்னம் கிடைத்திருப்பதை இனிப்பும் விசிலும் வழங்கி கொண்டாடினர். ஒரு சில இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தவெக ஆதவ் அர்ஜுனா கூறுகையில், நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது.
மக்களிடம் கொண்டு சேருங்கள்
நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில். தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றத்திற்கான விசில் சத்தம் ஒலிக்கட்டும்
இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும் என்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
-
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?












Click it and Unblock the Notifications