"I am the King of Bay of Bengal!" வங்கக் கடலில் ரவுண்ட் அடிக்கும் புஸ்ஸி ஆனந்த்? புயல் வருதாமே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தற்போது கப்பலில் ரவுண்டு அடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த முறையாவது முன்ஜாமீன் கிடைக்குமா என தெரியவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது, அக்கட்சியினர் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்தனர். இதனால் அந்தந்த பகுதி மக்களுடன் அவர்கள் நன்கு பழகினர்.

இதன் விளைவு விஜய்யின் பெயர், இயக்கக் கொடியை பயன்படுத்தாமலேயே உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்தனர். பல இடங்களில் முன்னணி கட்சிகளை பின்னுக்கு தள்ளினர். இது விஜய்யின் அரசியல் வருகைக்கு அச்சாரம் போட்டதாக இருந்தது.
செல்வாக்கு
இதையடுத்து தனது செல்வாக்கை ஆழம் பார்த்த விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். அவர் கட்சிக் கொடி, கட்சி பாடல்களை வெளியிட்டார். தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராக நிறைய கேள்விகளை எழுப்பினார்.
தொண்டர்கள்
இதை பார்த்த தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். வரும் 2026 ஆம் ஆண்டு விஜய்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட தொடங்கினர். விஜய்யை சமாளிக்க முடியாத அளவுக்கு நிறைய கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
கண்ணு பட்டுடிச்சு
யார் கண்ணு பட்டதோ என்னவோ ! மொத்தம் சுக்குநூறாக உடைந்து பேனது. கடந்த 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். சிறு குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பலியாகிவிட்டனர்.
கூட்ட நெரிசல்
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாட்டை கட்சி சார்பில் செய்யவில்லை என கூறி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்
இதனால் புஸ்ஸியும் நிர்மலும் தலைமறைவாகிவிட்டனர். அப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்தனர்.
புஸ்ஸி ஆனந்த் எங்கே
இதனால் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். ஏற்காடு, சேலம், கேரளா, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தங்கள் மீது தவறு இல்லை என்றால் எதற்காக ஒளியணும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வங்கக் கடலில் புஸ்ஸி ஆனந்த்
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தற்போது வங்கக் கடலில் கப்பலில் நடுகடலில் சுற்றிக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரை எப்படி கைது செய்வது என போலீஸார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரது இருப்பிடத்தை டிராக் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications