பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை? விஜய் பிளான் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை விட்டுவிட்டு பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அரசாணையை விஜய் ரத்து செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை பட்டினமப்பாக்கத்தில் வீட்டு வசதி, வருவாய்த் துறை, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ரூ 1200 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான அரசாணை கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

TVK government

ஆனால் பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் அரசாணைக்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராஜர் உள்ளிட்டோர் பணியாற்றிய தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதா, ஏன் பழைய தலைமைச் செயலகம் நன்றாகத்தானே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வரும் 29 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் மீனவர்களுக்கு எதிராக தவெக அரசு செயல்படாது. புதிய தலைமைச் செயலக திட்டம் மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இப்போதே இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொதுத் துறை செயலாளருக்கு அவர் அறுவுறுத்தல் வழங்கியுள்ளாராம்.

அதே நிலையில் புதிய தலைமைச் செயலகம் என்பது நிச்சயம் வேண்டும் என்ற முடிவில் விஜய் இருக்கிறாராம். இதற்காக பல்லவன் இல்லத்தை தேர்வு செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறார்களாம். அங்கு மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் பணிமனைகள் அமைந்துள்ளன.

போக்குவரத்து பணிமனைகளுக்கு வேறு இடத்தை வழங்கிவிட்டு 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த பல்லவன் இல்லத்தில் நிர்வாக கட்டடங்கள் முழுவதையும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையை மட்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

திருவிடந்தை, தையூர், பல்லவன் இல்லம் வரிசையில் தீவுத்திடலும் புதிய தலைமைச் செயலகம் குறித்த இடத்தேர்வில் அங்கம் வகிக்கிறது. எனவே விஜய் எந்த இடத்தை டிக் அடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் அத்தனை எதிர்ப்பை மீறி புதிய தலைமைச் செயலகத்தை கட்டமாட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+