படிச்சு படிச்சு சொன்னோமே.. திமுகவ ஃபாலோ பண்ண சொல்லி! செங்கோட்டையனிடம் புலம்பிய சிஷ்யக் கோடிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவில் சேர்ந்து சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், செங்கோட்டையனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், அவருடன் தவெகவில் இணைந்த ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படாதது, விஜயை நேரில் சந்திப்பதற்கே தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் சூழல், செங்கோட்டையனை கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் பிரசாரக் குழு பட்டியலில் செங்கோட்டையனுக்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சியை விட்டு வெளியேறிய செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். அவருக்கு, கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியும் வழங்கப்பட்டது.

இந்த இணைப்பு, தவெகவில் அனுபவமிக்க மூத்த அரசியல்வாதிகள் இணைகின்றனர் என்ற வகையில் அப்போது முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தலைவர் விஜய் பிரசாரக் குழுவை அறிவித்துள்ளார்.

Sengottaiyan vijay TVK

செங்கோட்டையன் தவெக

இதில், முதலிடத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், இரண்டாம் இடத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் செங்கோட்டையன் பெயர் இடம்பெற்றுள்ளது. மூத்த அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு, மூன்றாம் இடம் வழங்கப்பட்டிருப்பதே அவரது ஆதரவாளர்களிடையே அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற சோகத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக அரசியல்

மேலும் அதிமுக திமுகவில் இல்லாத வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டுமானால் புஸ்ஸி ஆனந்திடம் தான் அனுமதி பெற வேண்டும் என சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவுடன் கோவைக்கும் ஈரோட்டுக்கும் வந்த செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ந்து போன அவர் அடுத்த நாள் காலையில் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டாராம் ஆனால் அவர் போனை எடுக்க வில்லையாம்.

தவெக உள்கட்சிப் பிரச்சினை

சற்று நேரத்தில் லைனுக்கு வந்த ஆனந்த் மாவட்ட செயலாளரை அழைக்க சொல்கிறேன் என சொல்லிவிட்டு வைத்ததும், அந்த மாவட்ட செயலாளர் அழைத்தாராம். இதனால் செங்கோட்டையன் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறதும் மேலும் சக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அறிவுரை வழங்கக்கூட செங்கோட்டையனுக்கு அதிகாரம் இல்லையாம். மேலும், தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.ஜி.ஆர். குறித்து செங்கோட்டையன் பேச 'வியூக வகுப்பாளர்' இங்கே எல்லாமே விஜய் தான் அவரை பற்றி மட்டும் பேசுங்க என சொன்னாராம்.

செங்கோட்டையன்

தொடர்ந்து மற்றொரு ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ, ஜனநாயகன் விவகாரம் தொடர்பாக பேசிய போது டெல்லியில் எனக்குத் தெரிந்த நிர்வாகிகளிடம் பேசுகிறேன் என சொன்னதற்கு கொஞ்சம் வெளியே இருங்க என அவரை அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் தவெக தலைமையால் அவமதிக்கப்பட்ட செங்கோட்டையனின் ஆதரவாளர்களுக்கும் தற்போது வரை பொறுப்பு வழங்கப்படவில்லை.

ஆதரவாளர்கள் அதிருப்தி

செங்கோட்டையன் பட்டியல் தந்தாலும் அதனை கண்டு கொள்ளக்கூடாது என தலைமை உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு செங்கோட்டையன் சென்று பல மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனாலும் விஜயை சந்திக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. வீட்டுக்கு சென்றபோதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் விஜயை சந்திக்க வரக்கூடாது என சொன்னார்களாம். இப்படி அடுத்தடுத்த சம்பவங்களால் கடும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் சொந்த ஊருக்கு சோகத்துடன் திரும்பி இருக்கிறார்.

செங்கோட்டையன் எதிர்காலம்

இந்த நிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் புது கட்சி என்று சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தில் சீனியர்களுக்கு மதிப்பே இல்லை என அவரது ஆதரவாளர்கள் செங்கோட்டையனிடம் குறைபட்டு கொண்டார்களாம். மேலும் தேர்தலுக்கு முன்னதாக வேறு கட்சிக்கு சென்றுவிடலாம் என அவர்கள் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+