விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியல.. சோகத்தில் தவறான முடிவெடுத்த தவெக தொண்டர்கள்.. இத்தனை பேரா?
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் தன் ஆதரவை வழங்கியது. சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநரிடம் உரிமை கோரியது. எனினும், தவெகவுக்கு 118 என்ற மெஜாரிட்டி நம்பர் இன்னும் உறுதி செய்யப்படாததால் விஜய் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்தச் சூழலில் தவெக தொண்டர்கள் தவறான முடிவுகளை எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47 வயது). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இந்த நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய், முதலமைச்சராக முடியாத சூழல் நிலவி வருவதால் மனமுடைந்த இசக்கியப்பன், இன்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இசக்கியப்பன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42). கட்டிடத் தொழிலாளியான இவர், தீவிர விஜய் ரசிகர். இவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது மாரிமுத்துவின் நண்பர்கள் அவரிடம் விஜய் ஆட்சி அமைக்க முடியாது. நாங்கள் அவரை ஆட்சி அமைக்கவும் விடமாட்டோம் என கூறி கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதனால் மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்கு சென்ற மாரிமுத்து, கொசுவத்தி சுருளை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். பின்னர் தனது மனைவியிடம், விஜய் ஆட்சி அமைக்க மாட்டார் என்றும் அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், எனவே கொசுவத்தி சுருளை தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனடியாக மாரிமுத்துவை தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவை உறுதிப்படுத்தாத சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் தவெக தொண்டர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை தவெகவினர் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்த நிலையில், விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இதனால், விஜய் பதவியேற்பு விழா நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பதவியேற்பு நிகழ்ச்சியை பார்க்க வந்த தவெக தொண்டர்கள், சோகத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சிகளும் அரங்கேறின.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications