தவெக உள்கட்சி சர்வே.. இவ்வளவு சப்போர்ட் இருக்கா? இதெல்லாம் விஜய்க்கு தெரிந்தால்.. எல்லாமே மாறுமே!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநில அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய மாற்றம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சமீபத்திய உள்கட்சி சர்வே முடிவுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையை விஜய் தலைமையிலான புதிய படை அசைத்து பார்க்க கூடும் என்று கூறுகிறதாம்.. ஆனால் இந்த சர்வே உண்மையா என்பதுதான் சந்தேகம்!

வாக்கு சதவீதத்தில் முதலிடம்
தவெகவின் இந்த பிரத்யேக உட்கட்சி சர்வேயின்படி, அக்கட்சி 35.11% வாக்கு சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆளும் திமுக கூட்டணி 27.67% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 26.29% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுளாக் இரு பெரும் துருவங்களாக இருந்த திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பெறுவதாக உட்கட்சி சர்வேக்கள் கூறுவது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் 'அலையென' மாறும் ஆதரவு
இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். சர்வே முடிவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் உறுதியாக விஜய்யின் பக்கம் இருப்பதாக அந்த சர்வே கூறுகிறதாம். . தற்போது தமிழக அரசியலின் உண்மையான மோதல் 'திமுக vs தவெக' என்ற நிலைக்கு மாறியுள்ளது என்று அந்த சர்வே கூறுகிறதாம். விஜய் ஒரு சினிமா நட்சத்திரமாக மட்டுமின்றி, தமிழகத்தின் "புதிய நம்பிக்கை" ஆகவும் பார்க்கப்படுகிறார். அவர் மீதான மக்களின் அனுதாபமும், எதிர்பார்ப்பும் கட்சிக்கான ஆதரவை ஊக்கப்படுத்துகின்றன என்று அந்த சர்வே கூறுகிறதாம்.
கிராமப்புறங்களிலும் வேரூன்றும் தவெக
பொதுவாக நகர்ப்புறங்களில் மட்டுமே செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்ட விஜய், தற்போது கிராமப்புறங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார். சர்வேயின்படி, தவெகவின் வாக்கு வங்கி கிராமப்புறங்களில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது தேர்தலின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய காரணியாகும்.
150+ இடங்கள்: ஒரு மாபெரும் வெற்றி கணிப்பு
இந்த அமோக ஆதரவின் அடிப்படையில், 2026 தேர்தலில் ஒரு "மின்னல் வேக வெற்றியை" (Landslide Victory) தவெக எதிர்பார்க்கிறது. இந்தத் தேர்தலில் அக்கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தவெக தலைமை நம்புகிறது.
ஆனால் ஒரு கட்சியின் உள்கட்சி சர்வே முடிவுகள் அப்படியே நிஜமாகுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. தவெக கணித்துள்ள 35.11% வாக்கு சதவீதம் என்பது தரைமட்ட யதார்த்தத்தில் சாத்தியமா என்பதைப் பின்வரும் காரணிகளைக் கொண்டு ஆராயலாம்:
1. உள்கட்சி சர்வே vs மற்ற கணிப்புகள்:
பொதுவாக, எந்தவொரு கட்சியும் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே சாதகமான சர்வே முடிவுகளை வெளியிடும். திமுக, அதிமுக போன்ற அரை நூற்றாண்டு காலக் கட்டமைப்பைக் கொண்ட கட்சிகளை, ஒரு புதிய கட்சி இவ்வளவு குறுகிய காலத்தில் முந்துவது என்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய சவாலாகும்.
2. இளைஞர்களின் வாக்கு வங்கி:
35 வயதிற்குட்பட்டோரின் ஆதரவு விஜய்க்கு பெரும் பலமாக இருந்தாலும், தேர்தலின் போது அவர்கள் அனைவரும் வாக்களிக்க வருவார்களா என்பது முக்கியம். அதோடு தேர்தல் நெருங்க நெருங்க இதெல்லாம் வாக்காக மாறுவது கடினம். இதனால் வாக்கு வாங்கி 10%க்கும் கீழ் போனாலும் வியப்பில்லை.
3. கூட்டணிக் கணக்குகள்:
தமிழக அரசியலில் கூட்டணிகள் மிக முக்கியமானவை. திமுக மற்றும் அதிமுக வலுவான கூட்டணிக் கட்சிகளைக் கொண்டுள்ளன. தவெக தனித்துப் போட்டியிடுகிறதா அல்லது மற்ற கட்சிகளை இணைக்கிறதா என்பதைப் பொறுத்தே இந்த வாக்கு சதவீதம் உண்மையான வெற்றியாக மாறும். ஆனால் அதற்கும் போதிய அளவில் இப்போது பெரிய கட்சிகள் இல்லை என்பதால் 35.11% வாக்கு சதவீதம் வாங்குவது என்பதெல்லாம் இயலாத காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications