“இடைத்தேர்தலில் வாக்காளர்களை மட்டுமல்ல.. ஊரையே விலை பேசுகிறது தவெக”.. மு.வீரபாண்டியன் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இடைத்தேர்தலில் வாக்காளர்களை மட்டுமல்ல, தெருக்களையும், ஊரையும் விலை பேசுகிறது தவெக" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தொகுதிகளில் பல கிராமங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு உள்ளனர். இதுவரை எட்டிப் பார்க்க முடியாத அமைச்சர்கள் எல்லாம் தெருக்களில் முகாமிட்டிருப்பது ஏன்? ஊரையே விலை பேசும் நிலை உள்ளது. இடைத்தேர்தலில் வாக்காளர்களை மட்டுமல்ல, தெருக்களையும், ஊரையும் விலை பேசுகிறது தவெக.

by election cpi cpim tvk

இவ்வளவு காலம் இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் உங்கள் ஊரில் கோவில் கட்ட வேண்டுமா? நாங்கள் கட்டுகிறோம், பள்ளிக்கூடம் வேண்டுமா நாங்கள் கட்டித் தருகிறோம் எனப் பேசுகிறார்கள். இது அரசின் கடமை. ஆனால் இந்த நேரத்தில் அப்படி பேசி ஓட்டு கேட்பது ஊரையே விலை பேசுவது அல்லவா? ஜனநாயகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தலைவர்கள் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உருவ கேலி ஏற்கத்தக்கது அல்ல. மாநில நெடுஞ்சாலை பெயர்ப்பலகைகளில் இந்தி எழுதப்பட்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 50, 60 ஆண்டுகால ஆட்சியை 4 மாத ஆட்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல; நல்லது செய்தால் வரவேற்போம்." என்றார்.

மேலும், மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், "நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரு இயல்பான தேர்தல் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவிடத்தில் வெற்றி பெற்றுவிட்டு அதிகாரம் இருக்கிற தவெகவுக்கு செல்கிற இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது நெறிசார்ந்த அரசியல் அல்ல. பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன் பல நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டார்கள்.

பல எம்.பிக்களை, பல கட்சி தலைவர்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டார்கள். அந்த வகையில்தான் தவெகவின் அணுகுமுறை உள்ளது. இது ஏற்புடையது அல்ல. எனவே, அவர்களை ஆதரிக்க இயலாது என்று சொல்லி நாங்கள் தனியாகக் களம் காண்கிறோம்." எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+