இந்தியா கூட்டணியில் தவெக? முதல்முறையாக கூட்டத்தில் பங்கேற்பு.. ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்முறையாக தவெக பங்கேற்றுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் பங்கேற்றுள்ளனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

TVK Joins INDIA Alliance Meeting for First Time Ministers Represent Party in Chennai

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக சென்னையில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக தவெகவும் பங்கேற்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் அபூபக்கர், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகித்து வந்தது. காங்கிரஸ் கட்சி, தவெக உடன் கூட்டணி சேர்ந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டங்களை திமுக புறக்கணித்தது. அதேசமயம், தவெகவும் இந்தியா கூட்டணி கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தது.

தவெக இதுவரை அதிகாரபூர்வமாக இந்தியா கூட்டணியில் இணையவில்லை. இந்நிலையில், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+