தொண்டர்கள் கையை மிதிக்கும் பவுன்சர்கள்.. உணர்ச்சிவசப்பட்டுட்டாங்ளாம்! புது விளக்கம் கொடுத்த சிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின் போது பவுன்சர்கள் தொண்டர்களின் கையை மிதித்தது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பாதுகாவலர்களுக்கு நாங்களும் அறிவுறுத்தியுள்ளோம் எனவும், ஆனால் சில நேரங்களில் அவர்களும் அழுத்தத்துக்கு உள்ள ஆவதால் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக இணை பொதுசெயலாளரும், தவெக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனக்கன்குளத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," எல்லா இடங்களிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. முதியோர்களை திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

TVK CTR Nirmal Kumar Tamil Nadu Assembly Election 2026

சிடிஆர் நிர்மல்குமார்

இதற்கான வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். காவல் உயர் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்திற்குப் பிறகு பாதுகாப்பு சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. திமுக பணம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். ஒரு சில இடங்களில் 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். தபால் வாக்கில் ஊழியர்கள் தவறு செய்தால் பொதுமக்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் புகார் கொடுங்கள்.

கார்த்திக் சிதம்பரம்

திருப்பரங்குன்றத்தில் 8000 டோக்கன் கொடுப்பதால் கேள்விப்பட்டோம். நாங்க செல்லும் இடங்களில் பொதுமக்களே சொல்கிறார்கள், அவர்கள் என்ன டோக்கன் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு எங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எடப்பாடி தொகுதியில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. கார்த்திக் சிதம்பரம் குடும்பத்திற்காக ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக சிதம்பரம் மொத்த காங்கிரஸ் கட்சியில் திமுகவில் அடமானம் வைத்தவர்கள்.

உதயநிதி

கோபாலபுரம் குடும்பம் இருப்பதைப் போல தமிழக காங்கிரஸ் கேடுக்க சிதம்பரம் குடும்பம் போதும். அவர்களுக்கு என்ன நிர்வாகத் திறமை உள்ளது. தனிப்பட்ட முறையில் நின்றால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் வாங்குவாரா? சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தான் ஹம்மர் காரை தேடி உதயநிதி வீட்டில் சிபிஐ ரைடு நடந்தது.

பவுன்சர் சர்ச்சை

பாதுகாவலர்களுக்கு நாங்களும் அறிவுறுத்துகிறோம். ஆனால் சில நேரங்களில் அவர்களும் அழுத்தத்துக்கு உள்ள ஆவதால் உணர்ச்சி வசப்படுகிறார்கள். தொண்டர்களை தாண்டி அதிகமாக பொதுமக்கள் இருக்கிறார்கள். காவல்துறை தவிர்த்து வேறு யாரும் கட்டுப்படுத்த முடியாது. அறிவிப்புகளை முதல் நாள் மாலை தான் வெளியிடுகிறோம். அதையும் மீறி பெரும்பாலான பொதுமக்கள் தான் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் பேச அனுமதி இல்லை அதனால் சைக்கிள் செல்வது இது போன்ற பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

விஜய் கூட்டம்

கடலூரில் மேற்கு மாவட்ட இருந்தது மத்த இடங்களில் திட்டமிடப்பட்டதாகவும், இரத்தானதாகாவும் வரும் தகவல் உண்மை அல்ல. உதயநிதியும் அவர் அப்பாவும் எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நமக்கு தெரியும். இந்த ஐந்து ஆண்டுகளாக வெள்ளத்தின் போது கூட உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை கிடைத்தால் 24 மணி நேரமும் களத்தில் எங்கள் தலைவர் இருப்பார்.

அண்ணாமலை

தற்குறி பழனிசாமி என்று அண்ணாமலை சொன்னார், தவழ்ந்து காலில் விழுந்த பழனிச்சாமி என்று சொன்னார், பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பதற்காக நான் இந்த வேலையில் இருக்கிறேன் அந்த பதவி வெங்காயம் போன்று என சொன்னார். எல்லாத்தையும் விட்டு விட்டு இன்று அண்ணன் பழனிசாமி என்று சொல்கிறார். துப்பாக்கி பிடித்த கை என்றெல்லாம் பேசினார். அதிமுக பைல்ஸ் வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அதை வெளியிடுவாரா என்று கேளுங்கள். திமுக பைனான்ஸ் ஆளுநர் மாளிகையில் அவர் கொடுத்த டிரம்ப் பெட்டி சும்மா இருக்கிறது. அவர் 420 மலை என்று அப்போதே நாங்கள் சொன்னோம். அண்ணாமலை இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+