"கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போடுங்க” - TVK ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்க கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன், டெண்டர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போட்டு வெச்சு உடனே போலீஸுக்கு சொல்லிடுங்க.. எங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு போயிடுறாங்க.. அப்பறம் யார் எது செஞ்சாலும் அது தவெக உறுப்பினர்னு செய்தியா போடுறாங்க" என மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் பேசியுள்ளார்.

என்.ஆனந்த் பேசுகையில், "நம்மளுடைய முதலமைச்சர் விஜய், ஊழல் இல்லாத ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். அது இன்னும் 20 வருடத்திற்கு அந்த ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும் என்பதை தெளிவாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எங்க பேரைச் சொல்லி 'நான் டிரான்ஸ்பர் வாங்கித் தர்றேன், நான் டெண்டர் உனக்கு வாங்கித் தர்றேன்' அப்படின்னு யாராவது சொன்னா, அவங்களை கட்டிப்போட்டு வச்சிருங்க, போலீஸ்கிட்ட சொல்லுங்க உடனே வந்து புடிச்சுப்பாங்க.

TVK Leader N Anand Issues Stern Warning Against Using Party Name for Transfers and Tenders

ஏன்னா எங்களோட எல்லாருமே வருவாங்க, எல்லாருமே எங்க கூட போட்டோ எடுப்பாங்க. போட்டோ எடுக்கும்போது 'அவன வராதப்பா' அப்படின்னுலாம் நாங்க சொல்ல முடியாது. அதுல 99 பேர் நல்லவங்க இருக்கிறாங்கன்னா, ஓரளவுக்கு யாராவது ஒரு இடக்குமுடக்கான ஆளு வந்து எடுத்துருவாங்க எங்களுக்குத் தெரியாம. உடனே, 'இவருடன் நாங்கள் இருந்தோம்' அப்படிம்பாங்க. எங்களுக்கு என்னாங்க தெரியும்? நாங்கபாட்டுக்கு செவனேன்னு இருக்கிறோம். நாங்கபாட்டுக்கு எங்க வேலை உண்டுன்னு இருக்கிறோம்.

நீ பாட்டுக்கு வந்து 'ஒரு போட்டோ எடுத்துக்கிறேன், ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்'னு எடுத்துட்டுப் போயிட்டு, ஏதோ ஒன்று இடக்குமுடக்கான ஆளு வந்து எடுத்துட்டா நாங்களா அதுக்கு பொறுப்பு? அதை உடனே பத்திரிக்கை, 'தவெக உறுப்பினர்', 'தவெகாவில் இருந்தவர்' அப்படின்னு எதையாவது ஒன்னு சொல்லி அவங்களாவே அந்த துண்டெல்லாம் போட்டு டிசைன் பண்ணி அவங்களுக்கு போட்டுருவாங்க. இது ஏன் பண்றாங்கன்னே தெரியல.

மக்கள் தான் தீர்ப்பு கொடுத்துட்டாங்கல்ல... 'தலைவர் தான் முதலமைச்சராக வேண்டும்' என்று தீர்ப்பு கொடுத்து முதலமைச்சராவும் ஆயிட்டார். ஏதாவது நாங்கள் தப்பு பண்ணா எங்ககிட்ட சொல்லுங்க, அது தப்பாக இருந்தால் நாங்கள் கண்டிப்பாக அதைத் திருத்திக் கொள்வோம். அப்படித்தான் முதலமைச்சர் விஜய் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இங்க முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் மாற்றுக்கட்சியிலிருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் எல்லாம் நாங்கள் சொல்வது, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தயவு செய்து வாருங்கள். உங்களுக்கு, மக்களுக்கு என்ன தேவை? மக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்களுக்கு இந்தத் தொகுதியில் இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுங்கள், அதை நாங்கள் உடனடியாகச் செய்து தருகிறோம்.

வேற எதையாச்சும் நினைத்துக் கொண்டு யாரும் வர வேண்டாம் என்று நாங்கள் சொல்வோம். அவர்கள் சொல்வார்கள், 'நாங்கள் அப்படி நினைக்கவில்லை, எங்களுக்கு ஒரு தூய்மையான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான், அவருக்காகத்தான் நாங்கள் உங்கள் கட்சியில் சேருகிறோம், எங்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை' என்று சொல்லக்கூடிய நல்ல மனிதர்கள் தான் முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வருகிறார்கள்.

கண்டிப்பாக, அவர்களுடைய அனுபவத்தை என்னவெல்லாம் துறை சம்பந்தமாக அவர்களுக்குத் தெரிந்த விஷயத்தை நாங்கள் அதை நல்ல விஷயத்தை எல்லாத்தையுமே நாங்கள் எடுத்துக் கொள்வோம். யாருக்கெல்லாம் திறமைகள் இருக்கிறதோ, அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தில் கண்டிப்பாக வாய்ப்புகள் வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+