தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே
சென்னை: பிரமாண பத்திரத்தில் விஜய் வயது குறிப்பிட்டுள்ளது என்ன? என்ற குழப்பம் தவெகவில் மேலோங்கியது. குறிப்பாக சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த மனுக்களில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறின. இதையடுத்து, இன்றைய தினம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் தன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சில தினங்களுக்கு பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், 2025-ம் ஆண்டு மதுரை மாநாட்டின் போது நடந்த மோதல் தொடர்பான ஒரு வழக்கும், மார்ச் 30-ம் தேதி கொளத்தூர் பிரசாரத்தின் போது விதிமீறல் தொடர்பாகப் பதியப்பட்ட மற்றொரு வழக்கும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மாறுபட்ட விஜய் வயது
வழக்கு விவரங்கள் மட்டுமின்றி, வயது தொடர்பான தகவலிலும் குளறுபடி நீடிக்கிறது. பெரம்பூர் மனுவில் தனது வயது 52 எனக் குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கு மனுவில் 51 எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில் வெவ்வேறு தகவல்களை அளித்திருப்பது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்தது
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தரப்பினர் சொல்லும்போது, பழைய வழக்குகள் இருப்பது பிறகே தெரியவந்ததாகவும், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பிரமாணப் பத்திரத்தில் திருத்தங்கள் செய்ய இன்னும் அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தவெக தலைவர் பிரமாண பத்திரம்
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் 4 மனுக்கள் வரை தாக்கல் செய்ய முடியும் என்பதால், விடுபட்ட தகவல்களைச் சேர்த்து பெரம்பூர் தொகுதியில் இன்று அதாவது ஏப்ரல் 4ம் தேதி, திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விஜய் முடிவு செய்தாராம்
சட்ட வல்லுநர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, வேட்புமனு பரிசீலனையின் போது சரியான தகவல்களை அளித்து முரண்பாடுகளைக் களைந்தால் மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற வதந்திகள் பரவின.. விஜய் அங்கிருந்து பின்வாங்குவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
பெரம்பூர் மனு தள்ளுபடி?
ஒருவேளை பெரம்பூரில் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலோ அல்லது உத்தேசமாக வாபஸ் பெறப்பட்டாலோ, அது தவெகவின் தேர்தல் வியூகத்தில் பெரும் பின்னடைவை கட்டாயம் ஏற்படுத்தும்.
காரணம், சென்னையில் ஒரு தொகுதி, திருச்சியில் ஒரு தொகுதி எனத் திட்டமிட்டுப் போட்டியிடும் விஜய், வட தமிழகம் மற்றும் மத்திய தமிழகம் என இரண்டையுமே குறிவைத்துள்ளார். இதில், பெரம்பூரில் சிக்கல் ஏற்பட்டால், அது அந்தத் தொகுதி தொண்டர்களிடையே சோர்வை உண்டாக்குவதோடு, எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய அரசியல் ஆயுதமாகவும் மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இருந்தாலும், திருத்தப்பட்ட மனுத் தாக்கல் மூலம் இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அக்கட்சி உறுதியாக நம்பியது.. இந்நிலையில்,தற்போது கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை ஒளிவு மறைவுவின்றி தெரிவித்தாக வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், இந்த திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கர்ல செய்தார்.
-
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications