மே 4ம் தேதி இரவு ஆஸ்திரேலியா புறப்பட தயாராகும் விஜய்? பின்னணியில் இப்படியொரு காரணமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் தவெக தோல்வி என்று உறுதியானால், உடனடியாக வெளிநாடு செல்ல ஏதுவாக விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு தொடர்பாக அறிவிக்கவில்லை.

Vijay TVK tamilnadu assembly election 2026

இன்று ஒவ்வொரு மாவட்டமாக வாக்குப்பதிவு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக வாக்கு சதவிகிதம் 80%-ஐ கடந்திருப்பதால், அரசியல் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு பின் ஒவ்வொரு கட்சியினரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாயில் இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் செல்கிறார். அதேபோல் திமுக, அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் திட்டம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்த பின் விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்.

ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னரும் கூட விஜய் இதுவரை விடுமுறைக்கு புறப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், விஜய்யும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளர். ஆனால் அது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று என்று தெரிய வந்துள்ளது. அதாவது மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்வதற்காக விஜய் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்.

இந்த திட்டம் தேர்தல் முடிவுகளை பொறுத்தே செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவில் தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், அந்த திட்டத்தை விஜய் கைவிட்டுவிடுவார் என்று கூறுகின்றனர். ஒருவேளை தவெக தோல்வி அடைந்தால், உடனடியாக ஆஸ்திரேலியா பறந்துவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய்யின் திட்டம் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும் என்று தெரிகிறது. நேற்று தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் விஜய் ஆலோசனை நடத்தி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் தவெகவினர் எதிர்கொண்ட சிக்கல்களும் தொடர்பாக கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+