சூட்டிங் போல இப்தார் விழா நடத்திய விஜய்.. அவருக்குதான் பாவம் போகும்! நடிகர் பஷீர் பரபரப்பு பேச்சு
சென்னை: விஜய் இப்தார் நோன்பு விழா கொண்டாடியது சூட்டிங்கை போல இருந்தது என்றும், இந்த பாவங்கள் அனைத்தும் அவரையே சேரும் என்று நடிகர் பஷீர் பரபரப்பாக பேசியுள்ளார். நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ரமலான் மாதத்தை முன்னிட்டு அக்கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தரையில் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டு, அதில் தொழுகை நடந்தது. தவெக தலைவர் விஜய் ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்து, தொழுகையில் ஈடுபட்டார். வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்து வந்த விஜய், இஸ்லாமியர்கள் போல் தலையில் தொப்பியும் அணிந்து வந்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவருடனும் நோன்பு கஞ்சி குடித்து, இப்தார் விருந்தில் பங்கேற்றார். இதற்கிடையே, விஜய் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தொடர்பாக சில விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பஷீரும் விஜய் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தியதை விமர்சித்துள்ளார். விஜய் இப்தார் நோன்பு விழா கொண்டாடியது சூட்டிங்கை போல இருந்தது என்றும், இந்த பாவங்கள் அனைத்தும் அவரையே சேரும் என்றும் கூறியுள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் "தேசிய தலைவர்" முத்துராமலிங்க தேவர் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் பஷீர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், நாகூர் ஆண்டவர் சமாதியில் அவர் ஒளி ஏற்றி தொழுகை செய்தார். தொடர்ந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நோன்பு திறந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பஷீர் கூறியதாவது:-
"நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது ஒரு சூட்டிங்கை போல் இருந்தது. இந்த பாவங்கள் அனைத்தும் விஜய்யை தான் சேரும். விஜய் தவறாக வழிநடத்தப்படுகிறார். அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "சினிமாவில் திமுக கட்சியின் தலையீடு எதுவும் இல்லை' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications