நல்லகண்ணு உடல்நிலை.. பனையூரில் இருந்து பறந்த போன் கால்.. நலம் விசாரித்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய், நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார். நல்லகண்ணுவின் பேரனுடன் தொலைபேசி வாயிலாக பேசிய விஜய், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் தீவிர சிசிக்சை பெற்று வருகிறார்.

TVK Leader Vijay Inquires About Communist Leader Nallakannu s Health

நல்லகண்ணு கடந்த 22 ஆம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் தலையில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வமனை​யில் சிகிச்சைக்காக அனு​ம​திக்​கப்​பட்​டார். தலை​யில் தையல் போடப்​பட்​டு, தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த அவரை மருத்​து​வர்​கள் குழு​வினர் கண்​காணித்து வந்தனர்.

மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரண​மாக உடம்​பில் ஏற்​பட்​டுள்ள மற்ற சில பிரச்​சனை​களுக்​காக நரம்​பியல், நுரை​யீரல், இதய மருத்துவ நிபுணர்​கள் குழு​வினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தினமும் நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அவரின் பேரனிடம் நலம் விசாரித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் நலம் விசாரித்தார். அப்போது அவர் நலமாக உள்தாக மருத்துவர்கள் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+