சத்தம்மா "விசில்" போட சொன்னாரே விஜய்? மிஸ்ஸான ஆட்டோ..அப்ப தவெக இந்த சின்னத்தில்தான் போட்டியிட போகுதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். இந்த முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க விஜய் தீவிரமாகி வருகிறார்.. அந்தவகையில், 2 மாநாடுகளை நடத்தி முடித்த நிலையில், சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ள போவதாக தெரிகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக தேர்தலில் போட்டியிடும் சின்னம் எது? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. இதுகுறித்த சில தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளநிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

TVK Vijay Whistle symbol

அந்தவகையில் தவெக -வின் வருகையும், செயல்பாடுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..

எதிர்ப்பு ஓட்டுகள்

கடந்த காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை, அதிமுக, சீமான் இருவரும் தொடர்ந்து பெற்றுவந்த நிலையில், இந்த முறை அவை யாவும் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கணித்து சொல்கிறார்கள்.

அதாவது திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து விஜய்யின் அரசியல் மூவ் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளை கூறுகிறார்கள்.

நேற்றுமுன்தினம் மதுரையில் நடந்த தவெக 2வது மாநாட்டில், தவெக, திமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார் விஜய். அதற்கேற்றார்போல், அம்மாநாட்டில் விஜய்யின் பேச்சு முதல் தீர்மானம் வரை மொத்தமும் திமுகவுக்கு எதிரானதாகவே அமைந்திருந்ததை காண முடிந்தது..

திமுக - சிறுபான்மையினர் ஓட்டுக்கள்

வழக்கமாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி பாஜகவுக்கும், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி திமுகவுக்கும் செல்லும் நிலையில், இந்த இரு எதிர்ப்பு வாக்குகளில் விஜய் எவ்வளவு பெறப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.

அதேசமயம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வரப்போவதில்லை.. அந்தவகையில், நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு வலையை விரிக்க துவங்கியிருக்கிறது தவெக.

திமுக, நாம் தமிழர், அதிமுக, பாஜகவின் ஓட்டுக்களை குறி வைத்து விஜய்யின் தேர்தல் அரசியல் நகர்வதாக தெரிகிறது.

முதல் தேர்தல் சின்னம்

ஆனால், தவெக இதுவரை தேர்தலில் போட்டியிடாததால் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தில் மட்டுமே உள்ளது. தேர்தலுக்கு பிறகு உரிய வாக்கு சதவீதம் அல்லது உரிய அளவில் பிரதிநிதிகளை பெற்றால் மட்டுமே அந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்...

அந்தவகையில் வரப்போகும் தேர்தலில் தவெக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. காரணம், விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, அவரது ரசிகர் மன்றமான ''விஜய் மக்கள் இயக்கம்'' சார்பாக கடந்த 2022-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் போட்டியிட்டனர். அப்போது அவர்கள் ஆட்டோ சின்னத்தைதான் கேட்டு பெற்றிருந்தனர்..

மிஸ்ஸான ஆட்டோ

அதுமட்டுமல்ல, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020ல் ஆண்டு கட்சி தொடங்கவிருந்தபோது, ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்ட அந்த கட்சிக்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போய்விட்டது. எனவேதான், ஆட்டோ சின்னத்தை விரும்பி தவெக பெற முயற்சி மேற்கொண்டது..

அதேபோல, வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோ சின்னத்தை கேட்டு பெறவும் தவெக தயாரானது..

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் தற்போது 2025-ம் ஆண்டு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆட்டோ சின்னம் இடம்பெறவில்லை.. அப்படியானால் தவெக கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ஒதுக்கப்படாத சின்னங்கள்

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, புதிய கட்சிக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் லிஸ்ட்டிலுள்ள ஒரு சின்னத்தை கேட்டு பெற முடியும். ஆனால் ஆட்டோ சின்னம், கேரள காங்கிரஸ் (ம) என்ற கட்சிக்கு, மாநில அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டு விட்டது. ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்பட்டுவிட்ட சின்னத்தை, வேறு மாநிலத்தில் உள்ள வேறு கட்சிக்கு ஒதுக்க மாட்டார்கள்.. எனவே தவெகவுக்கு ஆட்டோ சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அப்படியானால் தவெக சின்னம் என்ன? என்ற அடுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. ஒதுக்கப்படாத சின்னங்களின் லிஸ்ட்டிலிருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தவெகவுக்கு வந்துள்ளது..

விசில் சின்னம் கிடைக்குமா

அப்படிப்பார்த்தால், ஒதுக்கப்படாத சின்னங்கள் லிஸ்ட்டில் மொத்தம் 184 சின்னங்கள் இருக்கிறதாம்.. அதில் 182வது சின்னமாக "விசில்'' சின்னம் உள்ளது.. இந்த விசில் சின்னத்தையே தவெக கேட்டு பெறக்கூடும் என்கிறார்கள்..

விஜய் நடித்த பிகில் படம், விசில் சின்னத்துடன மாஸ் ஹிட்டடித்தது.. எனவே அதையே கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்றும் அச்சின்னத்தை கேட்டுப் பெற்றால், மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம் என்றும் விஜய் தரப்பு கருதுகிறது.

தேர்தல் கமிஷனில் சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டும்.. எனவே,

ஒருவேளை விசில் சின்னம் கிடைக்காவிட்டால், தென்னை மர தோப்பு, லேப் டாப், டெலிவிஷன், பேட், நட்சத்திரம், அகல் விளக்கு போன்ற சின்னங்களும் விருப்ப சின்னத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+