5 மண்டலங்கள்.. கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு.. தேதி குறித்த விஜய்.. தவெக பரபர உத்தரவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு, வடக்கு, தெற்கு, டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில், கோவையில் முதலாவது பூத் கமிட்டி பயிற்சி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் விஜய் வழக்கம் போல் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்னும் களத்திற்கு வராமல் அரசியல் செய்து வருவது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி
மாதத்திற்கு ஒரு விழா என்று விஜய் பங்கேற்று வருவது அக்கட்சியினர் மத்தியிலும் விவாத பொருளாக மாறியது. இதனால் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பனையூரில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பூத் கமிட்டி மாநாடு
விஜய் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாநாக அல்லாமல் தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தவெக முடிவு செய்திருக்கிறது.
5 மண்டலங்கள்
வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா மற்றும் மத்திய மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதில் முதலாவதாக கோவையில் பூத் கமிட்டி பயிற்சி மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சுற்றுப்பயணம்
அதுமட்டுமல்லாமல் ஜூன் மாதம் வரும் விஜய் பிறந்தநாள் முதல் தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் விஜய் சுற்றுப்பயணத்திற்கு ஏற்றவாறு மாவட்டச் செயலாளர்கள் தங்களின் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் தொடங்கும் இடம், நிகழ்ச்சி நடக்கும் இடம், மக்களை சந்திக்கும் இடம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா?











Click it and Unblock the Notifications