தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தை காலையில் நடத்த முடியாத "நிலைமை!" பறக்கும் போன் கால்கள்! பனையூர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக 1 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகளும் எதிர்தரப்பிலிருந்து கடும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர்.

TVK vijay

அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, எம்எல்ஏ சரத் வரிசையில் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ. இதனால் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக உளவுத்துறை தரப்பிலிருந்து முதல்வருக்கு அறிக்கை பறந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் திடீரென பனையூரில் தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களின் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டி இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென எம்எல்ஏக்களை தொடர்பு கொண்ட தவெக தலைமை அனைவரும் உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் எனவும், கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பறந்திருக்கிறது.

பல எம்எல்ஏக்கள் நேற்று இரவே சென்னை வந்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆறு மாத காலங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கலாம் என சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சர்ச்சைகளில் சிக்கிய எம்எல்ஏக்கள் குறித்த சில அறிவுரைகளும் வழங்கப்படலாம் என்கின்றனர். இந்த நிலையில் தான் கடைசி நேரத்தில் திடீரென கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணிக்கு கூட்டம் தொடங்கலாம் என பனையூர் வட்டாரங்கள் சொல்லுகின்றன.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் சில எம்எல்ஏக்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டு நிலையில் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அனைவரும் வந்த பிறகு கூட்டம் தொடங்கும் என்கின்றன தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+