"ஆதவ் அர்ஜுனா பற்றி குறைத்துப் பேசினேனா?.. கல்லறைக்குப் போகும் வரை தவெக” - நாஞ்சில் சம்பத் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகவும், முக்கிய பேச்சாளராகவும் செயல்பட்டு வரக்கூடியவர் நாஞ்சில் சம்பத். மதிமுகவில் வளர்ந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். அதன்பிறகு திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது தவெகவில் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

Nanjil sampath

இந்நிலையில் தான் அண்மையில் அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா... என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது... என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது... என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..." என்று தெரிவித்திருந்தார்.

கட்சிக்காரர்கள் பலருக்கும் தவெக அரசில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிரபலமான பேச்சாளரான நாஞ்சில் சம்பத்துக்கு எந்தவொரு முக்கிய பதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், இது அவருக்கு அதிருப்தி ஏற்படுத்திருக்கும் என்றும், இடைத்தேர்தல் பரப்புரையின்போது தான் பயன்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கத்திலும் அவர் வெளிப்படுத்தியதாக பேச்சுகள் எழுந்தன.

இதையடுத்து அவரிடம் தவெக தலைமை பேசியதாக கூறப்பட்ட நிலையில்,
உப்பைப் போல எளிமையான தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய். இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் நாஞ்சில் சம்பத் பேசியதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. "இது இயக்கம் அல்ல... இது ரசிகர் மன்றம்...
இது கட்சி அல்ல...இது கார்ப்பரேட் கம்பெனி.. நான் வெளியே வருவது விலகல் அல்ல... விடுதலை. ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் அதிகார தோரணை என்னை அச்சப்பட வைக்கிறது. தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்னாகும் என்று எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சம் பதறுகிறது" என நாஞ்சில் சம்பத் பேசியதாக ஒரு பதிவு பரவி வருகிறது.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த ஆதவ் அர்ஜுனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம்.

தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+